ஜோ படம் வரக்கூடாதுன்னு நிறைய பேர் தடுத்தாங்க!.. 50வது நாளில் எமோஷனலான பிக் பாஸ் பிரபலம்!..

Published on: January 9, 2024
---Advertisement---

இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் பிக் பாஸ் பிரபலமான ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பாவ்யா திரிகா நடிப்பில் கடந்த நவம்பர் 24ம் தேதி வெளியான படம் ஜோ. விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அந்த படம் 50வது நாள் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளது. அதில், கலந்து கொண்டு பேசிய ரியோ ராஜ் இந்த படம் வரக் கூடாது என சிலர் தடுத்ததாக ரொம்பவே எமோஷனலாகி பேசினார்.

ஜோ படத்தை ஹரி சொல்லும் போதே இந்த படம் நல்லா வரும் என நினைத்து படத்தில் முழு உழைப்பையும் கொட்டினோம். படத்தில் நடித்த அனைவருமே அறிமுக நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்பதால் அனைவரும் எப்படியாவது நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என உழைத்தார்கள். அதன் பலன் தான் 50வது நாள் விழாவில் இங்கே நாங்க எல்லாம் மேடையில் அமர்ந்திருக்கிறோம் என்றார்.

இதையும் படிங்க: கோட் படத்துக்கு ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!.. கல்லா கட்டுமா தளபதி 68!..

இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டுள்ளேன். ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் விற்காத முன்பே படத்தின் ரிலீஸ் தேதிக்கு சரியான நாள் மற்றும் தியேட்டர்கள் கிடைத்த நிலையில், அந்த லாபத்தைக் கூட கருத்தில் கொள்ளாமல் படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்தார். படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில், இப்போ ஓடிடி மற்றும் சாட்டிலைட் நல்ல தொகைக்கே விற்பனையாகி உள்ளது.

தயாரிப்பாளரிடம் சிலர் சென்று படத்தை பண்ணாதீங்க என்றே தடுத்தனர். ஆனால், அவர் தான் என் மீதும், இந்த கதையின் மீதும் நம்பிக்கை வைத்து படத்தை எடுக்க முன் வந்தார். ஒருத்தரோட கனவை யாரும் சிதைச்சிடாதீங்க, இந்த படத்தை பண்ணக் கூடாதுன்னு தடுத்தவங்களுக்கு பதிலடியாகத்தான் இந்த 50வது நாள் விழா அமைஞ்சிருக்கு என ரியோ ராஜ் பேசினார்.

இதையும் படிங்க:அயலான் படத்துக்கு ஆப்பு வச்ச விஜய் பட புரடியூசர்!.. புலம்பி தவிக்கும் எஸ்.கே…

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.