3 முறை மீட்டிங்!… மிஸ்ஸான விஜய் படத்தின் வாய்ப்பு?!… ஆர்ஜே பாலாஜி சொன்ன காரணம்!…

Published on: November 19, 2024
rj balaji
---Advertisement---

ஆர்.ஜே பாலாஜி நடிகர் விஜய்யை மூன்று முறை சந்தித்து கதை கூறியதாகவும், ஆனால் அவரை வைத்து படம் இயக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே பாலாஜி. 2013 ஆம் ஆண்டு வெளிவந்த எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்து அறிமுகமான இவர் தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவரின் காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு வரத் தொடங்கியது.

அதன்படி வாயை மூடி பேசவும், வடகறி, இது என்ன மாயம், நானும் ரவுடிதான், ஜில் ஜங் ஜக் போன்ற படங்களில் நடித்திருந்தார். பின்னர் எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான இவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் மாறினார்.

இதையும் படிங்க: செம உஷாருதான் லோகேஷ்!… எப்படியெல்லாம் பிளான் போடுறாரு பாருங்க?!… கூலி பட அப்டேட்!…

இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்த காரணத்தால் தொடர்ந்து வீட்டில் விசேஷம் என்கின்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இது மட்டும் இல்லாமல் பிற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்போது சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றது. இப்படம் தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட ஆர்.ஜே பாலாஜி நடிகர் விஜய் குறித்து பேசியிருந்தார். ஒரு சில வருடத்திற்கு முன்பு ஆர்.ஜே பாலாஜி நடிகர் விஜயை சந்தித்து ஒரு கதை கூறியதாகவும், அந்த கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் அது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்பதால் விஜய் அதில் நடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஒரு வாய்ப்பும் இல்லன்னாலும் பந்தாவுக்கு குறைச்சல் இல்ல!.. ஓவர் ஆட்டம் போடும் விஷால்!…

அதனை தொடர்ந்து தளபதி 69 படத்திற்காகவும் விஜயை சந்தித்து ஆர்.ஜே பாலாஜி கதை கூறியதாகவும், அந்த கதையும் விஜய்க்கு பிடித்திருந்தது. ஆனால் இறுதியில் அந்த வாய்ப்பு ஆர் ஜே பாலாஜிக்கு கிடைக்காமல் போய்விட்டது. ஒருவேளை தளபதி 69 விஜயின் கடைசி படமாக இல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக விஜயை வைத்து ஒரு படத்தை இயக்கியிருப்பேன் என்று ஆர்.ஜே பாலாஜி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் எந்த ஒரு பெரிய ஹீரோவை வைத்தும் படம் எடுக்காத என்னை நம்பி முதன்முதலில் அழைத்து கதை கேட்டது விஜய் சார் தான். அவருக்கு நான் என் நன்றியினை சொல்ல வேண்டும் என்று மிக நெகிழ்ச்சியாக பகிர்ந்திருந்தார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.