Connect with us
rj balaji

Cinema News

யாரு ஹீரோன்னே தெரியல!.. ஒரு டிவிஸ்ட்டும் இல்ல!.. சொர்க்கவாசலுக்கு புளூசட்டை மாறன் விமர்சனம்!..

ஆர் ஜே பாலாஜி நடித்திருக்கும் சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கின்றார்.

ஆர் ஜி பாலாஜி முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து நேற்று வெளியான திரைப்படம் சொர்க்கவாசல். சென்னை மத்திய சிறையில் நடக்கும் உண்மை கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இப்படத்தை இயக்கி இருக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தை Swipe Right Studios, Think Studios நிறுவனம் இணைந்து தயாரிக்க கிரிஸ்டோ சேவியர் இசையமைத்து இருக்கின்றார்.

இதையும் படிங்க: ராயன் எல்லாம் இல்ல… ஜேசன் சஞ்சய் படத்தில் இதுதான் ஹைலைட்!… ஹீரோவே சொல்லிட்டாரே!..

இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன், பாலாஜி சக்திவேல், கருணாஸ், சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். படம் நேற்று வெளியான நிலையில் ரசிகர்களிடையே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகின்றது. கடந்த 1999 ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் நடைபெற்ற பல்வேறு வன்முறைகளை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை படத்தின் கதையை விறுவிறுப்பாக எடுத்து இருக்கின்றார் இயக்குனர் சித்தார்த். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இப்படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கின்றார். அவர் அதில் தெரிவித்திருந்ததாவது ‘படத்தின் முதலில் ஆர்.ஜே பாலாஜியும், அவரின் அம்மாவும் ஒரு தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார்கள்.

sorgavasal

sorgavasal

அந்த கடையை ஹோட்டலாக மாற்ற வேண்டும் என்பது அவர்களின் ஆசை. இதனால் லோன் வாங்க ஒருவர் உதவி செய்கின்றார். ஆனால் அந்த நபர் கொலை செய்யப்படுகின்றார். அந்த கொலை பழி தற்போது ஆர்.ஜே பாலாஜி மீது விழுக அவரை கைது செய்து ஜெயிலுக்கு கொண்டு சென்று விடுகிறார்கள். ஜெயிலில் செல்வராகவன் ரவுடியாக இருக்கின்றார். ஆர் ஜே பாலாஜி ஜெயிலுக்கு போக செல்வராகவன் தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் மொத்த ஜெயிலுமே செல்வராகவனின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. ஜெயிலுக்குள் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் கதை. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கின்றது. படத்திலிருந்த அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் கிளைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அது படத்தின் மைனஸாக பார்க்கப்படுகின்றது.

இதையும் படிங்க: எல்லா நடிகர்கள் செய்த விஷயம்… ரஜினிகாந்த் மட்டும் செய்யாத ஒரே சம்பவம்… இத கேளுங்க!..

படத்தின் மைய கதாபாத்திரம் யார்? நாம் யாரை பின்பற்ற வேண்டும் என்பது தெரியவில்லை. படத்தின் ஆரம்பம் முதலிலே இப்படித்தான் இருந்து வருகின்றது. சரி படத்தின் கிளைமாக்ஸ் ஆவது ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்த்தால் கிளைமேக்ஸ் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படத்தினை ஒரு மொக்க படம் என்று கூறி புறக்கணித்து விட முடியாது.

படத்தின் அனைத்து காட்சிகளும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். படத்தினை பாதியில் ஆரம்பித்து பாதியில் முடித்து விட்டது போல தோன்றுகின்றது. இது படக்குழுவினருக்கு சரியாக இருந்தாலும் படம் பார்த்து நமக்கு பத்தவில்லை’ என்று அவர் கூறியிருக்கின்றார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top