அஜித்தும் விஜயும் ரகசிய சந்திப்பு.!? உண்மையில் நடந்தது என்ன.?!
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி, ஒரே நேரத்தில் இளைஞர்கள் மத்தியில் பேசப்பட்டு, பின்னர் ரஜினி - கமல் என பேசிக்கொண்டிருந்த ரசிகர்களை அடுத்த ரஜினி - கமல் இவர்கள் தான் பேச வைத்தவர்கள் அஜித்தும் , விஜயும்.
ஒரு கட்டத்தில் இவர்களை வைத்து நடக்கும் வியாபாரங்களை கவனித்த இருவரும் அதனை அப்படியே மெய்ன்டெய்ன் செய்ய தொடங்கிவிட்டனர். இவர் படங்களில் அவரை தாக்கி பேசுவது போல் வசனமும், அவர் படத்தில் இவரை தாக்கி பேசுவது போல வசனங்களும் இடம்பெற்று வந்தன.
படங்களில் மோதி கொண்டாலும், நிஜத்தில் இருவரும் நண்பர்கள் போலவே பழகி வந்தனர். தற்போது ஓர் செய்தி கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அது உண்மையா பொய்யா என்பது கூட யாராலும் கூறமுடியவில்லை. ஏன் அது இவர்களது குடும்பத்தாருக்கு தெரியுமா என்பது கூட தெரியாது.
இதையும் படியுங்களேன் - ஷங்கர் படத்தையே நான் வேணாம்னு சொன்னேன்.! இந்தாளுக்கு எவளோ தில்லு பாத்தீங்களா.?!
அதாவது கொரோனா இரண்டாவது அலை இருந்து வந்த நேரத்தில் இருவரும் தனியாக சந்தித்து பேசினராம். அப்படி எதற்கு இந்த சந்திப்பு ரகசியமாக நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. இது நடந்ததா என்பது கூட யாருக்கும் தெரியாது.
கொரோனா கட்டுப்பாடுகள் ஐரோப்பாவில் தீவிரமாக இருந்த போது விஜயின் மகன் சஞ்சய் , நாடு திரும்ப முடியாமல் அங்கே மாட்டிக்கொண்டார். அப்போது, அஜித் , விஜயிடம் போனில் விசாரித்ததாக செய்திகள் வெளியாகின. அந்த சமயம் கூட இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது உண்மையா பொய்யா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.