ப்ளூ சட்டை மாறன் உடம்புக்குள்ள புகுந்த விஜய் அப்பாவோட ஆவி!.. அடேய் எல்லை மீறி போறிங்கடா!..

by Saranya M |   ( Updated:2024-01-29 08:55:05  )
ப்ளூ சட்டை மாறன் உடம்புக்குள்ள புகுந்த விஜய் அப்பாவோட ஆவி!.. அடேய் எல்லை மீறி போறிங்கடா!..
X

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேசிய பேச்சை பார்த்தால் இனிமேல் லோகேஷ் கனகராஜ் நிலைமை படுமோசம் தான் என்றே தெரிகிறது. அந்த அளவுக்கு பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ. ஏ சந்திரசேகர் தொலைபேசியில் பேசும்போதே அவரது போனை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என அவாய்ட் பண்ணிவிட்டார் என்கிற சர்ச்சை தற்போது வெடித்துள்ளது.

லியோ திரைப்படம் 100% என்னுடைய படம் என்ன ஒவ்வொரு முறையும் மாஸ்டர் படத்தில் விஜய் தலையீடு இருந்ததை மறைமுகமாக சுட்டிக் காட்டி வந்த லோகேஷ் கனகராஜ் அது விஜய்யின் தலையிடா? சந்திரசேகர் தலையிடா? என்கிற கேள்விகளையும் தற்போது கிளப்ப வழி வகுத்துள்ளார்.

இதையும் படிங்க: கிளாசிக் லுக்கில் அஜித்!. இப்படி கேப்பு விடாம அடிச்சா எப்படி?!.. நடிகர் எடுத்த வைரல் போட்டோ!..

இது ஒரு பக்கம் இருக்க, எஸ்.ஏ சந்திரசேகர் படத்துக்கு கொடுத்த விமர்சனத்தை பார்த்த ரசிகர்கள் இவர் ப்ளூ சட்டை மாறன் ஓட பெரியப்பா என ப்ளூ சட்டை மாறன் வீடியோவுடன் சந்திரசேகர் முகத்தை இணைத்து டீப் பேக் செய்து வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தனது பக்கத்தில் அதனை ஷேர் செய்து “அடேய்” என கமெண்ட் போட்டுள்ளார். எஸ்.ஏ. சந்திரசேகர் விமர்சனம் சொல்ல வந்துவிட்டால் ப்ளூ சட்டை மாறனுக்கு வேலையே இருக்காது என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினி வாங்கிய முதல் காருக்குப் பின்னால இப்படி ஒரு அவமானமா?.. சூப்பர்ஸ்டார் செஞ்சதுதான் ஹைலைட்!..

நடிகர் ரஜினிகாந்த் இதையெல்லாம் நோட் பண்ணி கடைசியில் வேட்டையன் படத்தை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜுக்கு டாட்டா காட்டாமல் இருந்தால் சரி என்றும் ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். ஏற்கனவே தேசிங் பெரியசாமியை ஒரு வருடம் காக்க வைத்தார். அதன் பின்னர் டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியை வெயிட் பண்ண வைத்து டாட்டா காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story