Connect with us

Cinema History

விஜய்யை நான் என்ன அடி அடிப்பேன் தெரியுமா? ஓப்பனாக கூறிய எஸ்.ஏ.சி!

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களின் மகன்கள் கதாநாயகனாக வலம் வருவதை அதிகமாக பார்க்க முடியும். உதாரணமாக சிம்பு, நடிகர் பிரசாந்த், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல நடிகர்களின் தந்தை இயக்குனர்களாகதான் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குனரின் மகனாக சினிமாவிற்கு வந்தவர்தான் நடிகர் விஜய்..

vijay1

vijay1

சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் விஜய்க்கு பெரிதாக வரவேற்பு இருக்கவில்லை. சொல்லப்போனால் விஜய்யை ஒரு கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளவே மக்கள் தயாராக இல்லை. அந்த சமயத்தில் தொடர்ந்து விஜய்யை கதாநாயகனாக்க போராடி வந்தவர் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர்.

மனம் திறந்த எஸ்.ஏ.சி:

தனியாக நடித்த விஜய்க்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் விஜயகாந்திடம் பேசி அவரது தம்பியாக செந்தூரப் பாண்டி திரைப்படத்தில் நடிக்க வைத்தார் எஸ் எஸ் சி. ஆனால் கடந்த சில காலங்களாக எஸ்.ஏ சந்திரசேகருக்கும் விஜய்க்கும் சுமுகமான உறவு இல்லை என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

SA Chandrasekhar

இடையில் ஒரு பேட்டியில் இது குறித்து எஸ்.ஏ.சியிடம் கேட்கும் பொழுது, ஊருக்கு வேண்டுமானால் விஜய் மிகப் பெரும் கதாநாயகனாக தெரியலாம். ஆனால் விஜய் சிறுவயதாக இருக்கும் பொழுது ஒழுங்காக படிக்கவில்லை என்றால் நான் ஸ்கேலை எடுத்து அவனை நன்றாக அடிப்பேன். உடனே அவனுக்கு அடித்த இடத்தில் சிவந்து விடும். உடனே நானே தேங்காய் எண்ணெய்யை எடுத்து அந்த பகுதியில் தேய்த்து விடுவேன்.

அப்படிப்பட்ட விஜயாகத்தான் இன்னமும் விஜய் எனக்கு தெருகிறார். இது எனது தவறா அல்லது சரியா என்று தெரியவில்லை என வெளிப்படையாக கூறியுள்ளார் எஸ்.ஏ.சி.

இதையும் படிங்க: லியோ படத்தில் விஜய் சேதுபதி இருக்காரா? போஸ்டரில் சிக்கிய விஷயம்…

google news
Continue Reading

More in Cinema History

To Top