ஜெயலலிதா சொன்னத விஜய் செய்யல!. அதனால பழிவங்கினார்!.. எஸ்.ஏ.சி ஓப்பனா பேசிட்டாரே!…

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். மேலும் பேசும் மேடைகள் எல்லாம் திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.. குறிப்பாக, சமீபத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய் ‘திமுக தீயசக்தி.. அதிமுக ஊழல் அடிமை கட்சி’ என்று விமர்சித்தார். மேலும் என்னை பார்த்தால் அழுத்தத்திற்கு பயப்படுபவன் போல் இருக்கிறதா?. நம்மகிட்ட அது நடக்கவே நடக்காது… என்றும் பேசினார்.

இதையடுத்து, அதிமுக, திமுக இரண்டுமே தற்போது விஜயை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கி விட்டார்கள். குறிப்பாக தனது திரைப்படம் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக விஜய்யும், அவரின் அப்பாவும் ஜெயலலிதா முன்பு கைகட்டி நின்றார்கள்.. அந்த விஜய்தான் இப்போது வீரமாக பேசிக்கொண்டிருக்கிறார்’ என அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஒருபக்கம், அதிமுகவினரும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து இந்த கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த விஜயின் அப்பா எஸ்.ஏ.சி ‘ஜெயலலிதா மேடம் என்னை சந்திக்க வருமாறு அழைத்தார்.. எல்லோரையும் போல் அவரின் காலில் விழக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.. அவரின் வீட்டுக்கு செல்லும்போது விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் மற்றும் இளைஞர் அணி செயலாளர் ஆகியோரை என்னுடன் அழைத்துச் சென்றேன்.. உள்ளே போனதும் அவரின் காலில் விழக்கூடாது என அவர்கள் இருவரிடமும் சொல்லிவிட்டேன்..

நீங்கள் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என ஜெயலலிதா என்னிடம் கேட்டார்.. நான் ஒப்புக்கொண்டேன்.. உங்கள் மகனை அதிமுகவுக்கு ஆதரவாக பேச சொல்லுங்கள் என்று கேட்டார். நான் ‘வேண்டாம்மா.. அவன் சின்ன பையன்’ என்றேன்.. ‘நான் அதிமுகவை ஆதரிக்கிறேன்’ என ஒரு வீடியோ போட சொல்லுங்கள்’ என்று கேட்டார்.. ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை.. அவருக்கு அந்த கோபம் இருந்தது.. அதனால்தான் பழிவாங்கினார்’ என சொல்லியிருக்கிறார்.

விஜயின் தலைவா படம் வெளியானபோது 2 நாட்கள் அப்படத்தை ரிலீஸாகவிடாமல் தடுத்தது குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

18 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

1 hour ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

15 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

21 hours ago