வம்ப விலை கொடுத்து வாங்கிட்டாரு! விஜயின் கூச்ச சுபாவத்தை போக்க எஸ்.ஏ.சி கையாண்ட புது டெக்னிக்

by Rohini |   ( Updated:2024-04-24 13:11:03  )
sac
X

sac

Actor Vijay: விஜய் அஜித் இருவரை பொறுத்தவரைக்கும் எல்லாரும் சொல்வது விஜய் மிகவும் அமைதியாக இருப்பார். செட்டில் யாரிடமும் அதிகளவு பேசமாட்டாராம். ஆனால் அஜித் ஷாட் முடிந்ததும் அனைவரிடமும் சகஜமாக பேசக் கூடியவர். கேரவனுக்கே போக மாட்டார். டெக்னீசியன் உட்பட அனைவரிடமும் கலகலப்பாக பேசுவார் என்றுதான் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

இவர்கள் சொல்வதை போல் விஜய் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர் என அனைவருக்குமே தெரியும். அதுவும் ஆரம்ப காலங்களில் மிகவும் வெட்கப்படுவாராம். யாரிடமும் அதிகமாக பேசமாட்டாராம். அவருடன் நடித்த சங்கீதா, சங்கவி, சுவாதி என இவர்கள் பல பேட்டிகளில் விஜயை பற்றி இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். மேலும் விஜய் அவரது அப்பா சந்திரசேகரிடம் பயம் கலந்த மரியாதையுடன்தான் பழகுவார்.

இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு விட்டாச்சு லீவு!.. இனி ‘தல’ய பிடிக்க முடியாது.. தல முழுக வேண்டியதுதான்!..

அந்த நேரத்தில் விஜய்க்காக கதை கேட்பவர் சந்திரசேகர்தான். இப்படி விஜயின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அவர் அப்பாதான். விஜயை வைத்து ஒரு சில படங்களை இவரே இயக்கிக் கொண்டிருக்க மற்ற இயக்குனர்களிடமும் தன் மகன் பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டு ஏகப்பட்ட இயக்குனர்களின் அலுவலகங்களுக்கு தன் மகனின் வாய்ப்புக்காக ஏறி இறங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் விஜயின் இந்த கூச்ச சுபாவத்தை போக்க எஸ்.ஏ.சி ஒரு ஐடியாவை பின்பற்றியிருக்கிறார். இப்போது வலைப்பேச்சு சேனலின் மூலம் பிரபலமாக இருக்கும் பிஸ்மி அப்போது ஒரு பத்திரிக்கையாளராக இருந்திருக்கிறார். விஜய் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்திருக்கிறார். அவரிடம் எஸ்.ஏ.சி ‘என் மகன் மிகவும் கூச்சப்படுகிறான். அதை எப்படியாவது போக்க வேண்டும். நீங்கள்தான் அதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்’ என கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: கமல் நடிப்பில் களைகட்டிய வெள்ளி விழா படங்கள்… கோவை சரளாவுடன் அசத்திய சதிலீலாவதி!..

உடனே பிஸ்மி நாளை விஜயை பேட்டி எடுக்கிற மாதிரி வருகிறேன் என சொல்லி அலுவலகத்திற்கு சென்றாராம். விஜயும் பிஸ்மியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்க ஏதோ ஏதோ கேள்விகளை கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்து விழி பிதுங்கி நின்றாராம். இதை வைத்தே பிஸ்மி விஜயை கிண்டலடிக்க விஜய் அப்படியே சிரித்துக் கொண்டாராம். அதிலிருந்தே பிஸ்மி பேட்டி எடுக்க வருகிறார் என்றால் விஜய்க்கு ஒரு மாதிரியாக நடுக்கமாக இருக்குமாம். இதை பிஸ்மி ஒரு பேட்டியில் கூறினார்.

Next Story