லியோ படத்தில் நடந்த கொடுமை!.. கதறும் நடன நடிகர்கள்!... இதெல்லாம் நியாயமே இல்ல!..
Leo : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கௌதம் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மாஸ்டர் படத்திற்கு பின் விஜயும் லோகேஷும் இணைந்துள்ளனர்.
விக்ரம் படத்தின் மூலம் லோகேஷ் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகி அவர் இயக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அவர் இயக்கும் படங்களை லோகேஷ் யூனிவர்ஸ்(LCU) என ரசிகர்கள் அழைக்க துவங்கிவிட்டனர். ஏனெனில் அவர் இயக்கும் படங்களில் இதுவரை காணாத கதாபாத்திரங்களையும், இருளில் வாழும் மனிதர்களையும் காட்டி ரசிகர்களை வேறு உலகத்திற்கு அழைத்து செல்கிறார்.
இதையும் படிங்க: 200 கோடி போச்சி!.. லியோ படத்துக்கு வந்த திடீர் சிக்கல்!. ஜெயிலர தாண்டுறது கஷ்டம்தான்!..
ரஜினியை வைத்தும் அவர் ஒரு படம் இயக்கவிருக்கிறார். இந்த படம் ரஜினியின் 171வது திரைப்படமாகும். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவிட்டு ரஜினி லோகேஷ் கனகராஜுடன் இணையவிருக்கிறார்.
ஒருபக்கம் லியோ படத்தின் புரமோஷன்கள் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் புதிய பாடல் வெளியாகவுள்ளது. அதேபோல், விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்க்கும் விஜய் கலந்துகொள்ளும் இசை வெளியீட்டு விழாவும் இந்த மாத இறுதியில் நடக்கவுள்ளது.
லியோ படத்தில் இடம் பெற்ற ’நான் வரவா’ பாடல் ஏற்கனவே வெளியானது. வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு விஜய் ஆட அவருக்கு பின்னால் பலநூறு பேர் நடனமாடியுள்ளனர். சுமார் 1200 பேரை வைத்து இந்த பாடல் காட்சியை 4 நாட்கள் எடுத்துள்ளனர். இதில், 300 பேருக்கு மட்டும் யூனியன் மூலம் சம்பளம் கொடுக்கப்பட்டுவிடது.
இதையும் படிங்க: ‘லியோ’ ரிலீஸுக்கு வந்த சிக்கல்! சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் தவிக்கும் படக்குழு
ஆனால், மீதிபேருக்கு இதுவரை சம்பளம் கொடுக்கப்படவில்லையாம். ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஒவ்வொருவருக்கும் 20 ஆயிரம் வரை கொடுக்க வேண்டுமாம். அவர்கள் எல்லாம் மற்ற வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் எப்படியாவது முகம் காட்ட துடிக்கும் நடன கலைஞர்கள் என சொல்லப்படுகிறது.
இதில் எங்கே தவறு நடந்தது என்பது தெரியவில்லை. இத்தனை கோடி போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் இதை கவனிக்க வேண்டும் என அந்த நடன கலைஞர்கள் பொங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்படியொரு உருட்டு.. இப்படியொரு உருட்டு!.. இது எந்த படத்தோட காப்பின்னு தெரியலையே.. லியோ புது போஸ்டர்!..