Cinema News
போற போக்குல இப்படி கலாய்ச்சிடீங்களே பாய்!… சல்மான்கான் சொன்னது யாரென்னு தெரியுதா?!…
நடிகர் சல்மான் கான் சமீபத்திய பேட்டியில் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என்று அழைப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்.
சினிமாவில் பொதுவாக ஒரு நடிகர்கள் மிகவும் பிரபலமாகும் பட்சத்தில் அவர்களுக்கு சில அடைமொழிகளை வைத்து அழைப்பது வழக்கம் தான். மற்ற துறைகளைத் தாண்டி சினிமாவில் மட்டும் இந்த ஒரு பழக்கம் காலம் காலமாக இருந்து வருகின்றது. தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழைத்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: சினிமாக்கு டாட்டா காட்டும் ஐடியாவில் அஜித்.. பரபரப்பாகும் டிசம்பர் மாதம்.. ஏங்க இப்படி?
அதிலும் தமிழ் சினிமாவில் சொல்லவே வேண்டாம். இரண்டு, மூன்று திரைப்படத்தில் நடித்து பிரபலமாகிவிட்டாலே போதும் உடனே ஒரு அடைமொழியை தூக்கிக் கொண்டு வந்து விடுகிறார்கள். தற்போதயெல்லாம் நடிகர்களுக்கு மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்களும், இயக்குனர்களுக்கும் அடைமொழி வைத்து அழைத்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தல, தளபதி, சுப்ரீம் ஸ்டார், மக்கள் செல்வன், மக்கள் திலகம் என ஏகப்பட்ட அடைமொழி இருக்கின்றது. அதேபோல தெலுங்கு சினிமாவிலும் மலையாள சினிமாவில் தொடர்ந்து தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு அடைமொழிகளை வைத்து ரசிகர்கள் அழைத்து வருகின்றார்கள்.
சமீபத்தில் நடிகர் அஜித் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் தல என்கின்ற அடைமொழியை நீக்குவதாக அறிவித்திருந்தார். தன்னை அனைவரும் அஜித் என்றும், அஜித் குமார் என்றும் இல்லை என்றால் ஏகே என்று அழைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தார். அவரை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் அவர்கள் தன்னை இனிமேல் உலகநாயகன் என்ற பட்டத்துடன் அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
தன்னை கமல் அல்லது கமலஹாசன் என்று அழைத்தால் போதும் என கூறியிருந்தார். இந்த செய்தி அவர்களின் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் சல்மான் கான் அவர்கள் இந்த அடைமொழி குறித்து பேசி இருந்தார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘மக்கள் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என்று அழைப்பது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தனக்கு இது போன்று அடைமொழி வேண்டும் என எப்போதும் நான் நினைத்ததில்லை. என்னை மக்கள் சல்மான் கான், ஷாலு அல்லது பாய் என்று அழைப்பதே நன்றாக இருக்கின்றது.’ எதற்கு தேவையில்லாமல் இந்த அடைமொழி எல்லாம் என்று பேசி இருந்தார்.
இதையும் படிங்க: நீ எடுக்குற முடிவு மத்தவங்களுக்கு சந்தோஷம் தரணும்… உனக்கு அல்ல! ரஜினி சொன்னது யாருக்கு?
இதை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து சல்மான் கான் யாரை கலாய்க்கிறார்? என பதிவிட்டு இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் தங்களது கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் என்பது தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.
அதேபோல் மெகா ஸ்டார் என்பது தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம். சல்மான் கான் நேரடியாக ரஜினியையும் சிரஞ்சீவியையும் குறிப்பிடவில்லை என்றாலும் அவர்களின் அடைமொழியை தான் குறிப்பிட்டிருக்கின்றார் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.