இன்னொரு ஊ சொல்றீயாவா? களைகட்டப் போகும் புஷ்பா 2 - ஆட போகும் நடிகை யார் தெரியுமா?

by Rohini |
sam
X

sam

Pushpa 2: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

படம் வெளியாகி தாறு மாறு ஹிட்டானது. சந்தன மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அல்லு அர்ஜூன் பெற்றார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் புஷ்பாவில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

இதையும் படிங்க: ரஜினியை அடிச்சு கைதட்டல் வாங்கும் ஒரே வில்லன் ரகுவரன்தான்! அவர் இடத்துல இவர வச்சா எப்படி?

ஒரு நல்ல விறுவிறுப்பான ஸ்கீரிப்ளேயுடன் பான் இந்தியா படமாக வெளியாகி அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் பாகத்தில் கூடுதலாக பிரியாமணியும் இணைந்திருப்பதாக தெரிகிறது.

புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைப்பெற்று வருகிறது. முதல் பாகத்தில் சில காட்சிகள் இரண்டாம் பாகத்திலும் தொடர்வதாக சில செய்திகள் வெளியானது. இந்த நிலையில் புஷ்பா படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே சமந்தாவின் ஊ சொல்றீயா பாடல்தான்.

இதையும் படிங்க: வாக்கிங்கில் ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்! இவ்ளோ விஷயம் நடந்துருக்கா!…

நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தா கம்பேக் கொடுத்த படம்தான் புஷ்பா. அதுவரை பல படங்களில் ஹீரோயினாக ஹோம்லி லுக்கில் பார்த்த நமக்கு சமந்தா இந்தப் படத்தில் அந்தப் பாடலில் ஐட்டம் ஆட்டத்தை வெளிப்படுத்தி உறைய வைத்திருப்பார்.

இந்தப் பாடல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் சமந்தா ஒரு பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தினார். இந்த பாடலுக்கு பிறகுதான் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இந்த நிலையில் ஊ சொல்றீயா பாடல் மாதிரியே புஷ்பா 2விலும் ஒரு பாடல் தயாராகிக் கொண்டிருக்கிறதாம்.அந்த பாடலுக்கும் சமந்தாவைத்தான் ஆட வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: அப்படி போடு… Bullygang-ல் காலியான ஒரு பக்கா விக்கெட்… மிஸ்ஸான பூர்ணிமா..

Next Story