Categories: latest news

த்ரிஷா நடிச்சு கண்டுக்கல.. அசால்ட்டா நடிச்சு பேர் வாங்கிய நயன்! என்ன மேட்டர் தெரியுமா?

Nayanthara Trisha: தமிழ் சினிமாவில் த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்னனி நடிகைகளாக இருந்து வருகிறார்கள். இருவரும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்த தமிழ் சினிமாவில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். நயன் ஐயா என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். த்ரிஷா ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக தன்னுடைய அறிமுகத்தை பதிவு செய்திருப்பார்.

அதன் பிறகு மௌனம் பேசியதே என்ற படத்தில்தான் ஹீரோயினாக நடித்திருப்பார். சினிமாவில் நயனை விட த்ரிஷா சீனியர் என்றாலும் இருவரும் இன்று ஒரு போட்டி நடிகைகளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு பேன் இந்திய நடிகைகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மனசெல்லாம் படத்தின் இயக்குனரான சந்தோஷ் கோலமாவு கோகிலா படத்தை பற்றிய அவருடைய கருத்தை ஒரு பேட்டியில் இப்போது பதிவு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: ரீ ரிலிஸ் படத்துக்கும் மட்டும்தானா? நாங்களும் வருவோம்.. மீண்டும் சூப்பர் ஹிட்டான அந்த சீரியல்

அதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது மனசெல்லாம் படம் இப்போது வந்திருக்க வேண்டிய படம். இந்த காலகட்டத்தில் ரிலீஸ் ஆகியிருந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்திருக்கும். இப்போதுள்ள படங்களில் அதிகமாக ஒர்க் அவுட் ஆகுவது ப்ளாக் காமெடிதான். அதை மனசெல்லாம் படத்தில் அப்பவே நான் செய்திருக்கிறேன்.

அதை போல் கோலமாவு கோகிலா படத்தில் யோகிபாபு நயனை காதலிப்பது போல கதை இருக்கும். அதை ரசிகர்கள் மிகவும் காமெடியாக பார்த்து அந்தப் படத்தை ஹிட்டாக்கினார்கள். நானும் இதே ஒரு கான்செப்ட்டைத்தான் மனசெல்லாம் படத்தில் வைத்தேன். வையாபுரி மற்றும் சுக்கிரன் த்ரிஷாவை காதலிப்பது போல மனசெல்லாம் படத்தில் வைத்திருப்பேன். ஆனால் மக்கள் அதை மிகவும் சீரியஸாக பார்த்தார்கள்.

இதையும் படிங்க: நைட் 12 மணிக்கு கோவை சரளாவின் வீட்டு கதவை தட்டிய இயக்குனர்!.. மனுஷன் இப்படியா இருப்பாரு!..

இதுதான் அந்தப் படம் ஓடாததற்கு ஒரு காரணம். ஆனால் இப்போது மனசெல்லாம் படம் வெளிவந்திருந்தால் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக மாறியிருக்கும் என சந்தோஷ் மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

 

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

8 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

9 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

9 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

10 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

16 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

18 hours ago