நாங்க எடுக்குற நல்ல படங்களை பாக்காதீங்க.. மஞ்சுமெல் பாய்ஸ் பாருங்க!.. சமுத்திரக்கனி காட்டம்!.

by சிவா |   ( Updated:2024-03-14 05:20:22  )
samuthirakani
X

தமிழ் திரையுலகில் சமூக அக்கறை கொண்ட இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் சமுத்திரக்கனி. இவர் படங்களில் சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் அனல் தெறிக்கும். சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சாதி, மத மோதல்கள், ஏழை - பணக்கார வேறுபாடுகள், வாலிபர்களுக்கு காதலின் மீது சரியான புரிதல் இல்லாமல் இருப்பது, கல்வியை வியாபாரம் ஆக்கியது என பல விஷயங்களுக்கு எதிராக தனது கருத்துக்களை ஆழமாகவும், அழுத்தமாகவும் சொன்னவர் இவர்.

இதைத்தொடர்ந்து சமூகத்திற்கு மெசேஜ் சொல்லும் வேடம் என்றாலே இயக்குனர்கள் சமுத்திரக்கனியை அழைக்க துவங்கினார். இதன் விளைவாக திரைப்படங்களை மட்டுமே இயக்கி வந்த சமுத்திரக்கனி மற்ற இயக்குனர் படங்களில் நடிக்க துவங்கினார். அவர்களின் படங்களிலும் சமூக அக்கறை பேசிவந்த சமுத்திரக்கனி ஒருகட்டத்தில் அதைவிட்டு விட்டு வில்லன் உள்ளிட்ட மற்ற வேடங்களிலும் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: நாங்களும் ஃபேன்ஸோட செல்ஃபி எடுப்போம்!.. அடுத்த தளபதியின் அட்டகாசங்கள் ஆரம்பம்!..

தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்களுக்கு அப்பாவாகவும் நடித்தார். ஒருகட்டத்தில் வில்லன் நடிகராகவே மாறிய சமுத்திரக்கனி. தற்போது தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக சமுத்திரக்கனி மாறியிருக்கிறார். பல அப்பா வேடங்கள் இவரை தேடி வருகிறது.

எனவே, இயக்குனர் சமுத்திரக்கனியை ரசிகர்கள் மிஸ் செய்து வருகிறார்கள். இந்நிலையில், ‘இப்போது ஏன் படங்களை இயக்குவதில்லை?’ என்கிற கேள்விக்கு பதில் சொன்ன சமுத்திரக்கனி ‘நல்ல படங்களை பலரும் பார்ப்பதில்லை. அடுத்த சாட்டை என்கிற ஒரு படம் எடுத்தோம். தனியார் கல்லூரிகள் எப்படி மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்.. மாணவர்களின் மனநிலை என்ன என காட்டியிருந்தோம்.

இதையும் படிங்க: கழட்டி விட்டாலும் நண்பனை மறக்கலயே!.. லோகேஷ் கனகராஜுக்கு முதல் வாழ்த்து சொன்னது யாருன்னு பாருங்க!..

ஆனால், அந்த படத்தை ரிலீஸ் செய்வதற்குள் படாத பாடுபட்டோம். சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. நல்ல படங்களின் அருமை தெரியாதவர்கள் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். இங்கே சரியான சிஸ்டம் இல்லை. எங்கள் படங்களை விற்பனை செய்ய நல்ல தளங்கள் இல்லை.

எங்கள் படங்களை வந்து பாருங்கள் என வியாபாரிகளிடம் கெஞ்ச வேண்டி இருக்கிறது. அதை பார்க்க கூட அவர்கள் விரும்பவில்லை. இதனால்தான் மற்ற மொழி படங்கள் கூட இப்போது தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை விட நல்ல படங்கள் இன்னும் ரிலீஸ் கூட ஆகாமல் பொட்டியில் தூங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இயக்கத்தை விட்டு விட்டு நடிப்பதற்கு போய்விட்டேன். நஷ்டமடைந்து நல்ல கருத்துக்களை எப்படி சொல்வது?.. இங்கு எல்லாம் மாறினால்தான் மறுபடி இயக்கம் பக்கம் வருவேன்’ என சமுத்திரக்கனி தெரிவித்திருக்கிறார்.

Next Story