நிஜமான ஹீரோன்னா சமுத்திரக்கனிதான்... எவ்ளோ பெரிய மனசுன்னு பாருங்க..!

samuthirakani
சினிமாவில் பல நல்ல சமூக அக்கறையுடன் கூடிய படங்களை எடுத்தார் சமுத்திரக்கனி. ஆனால் குசும்புக்கார ரசிகர்கள் அவரை கருத்து கந்தசாமி என்று கமெண்ட் அடித்தனர். சாட்டை, அப்பா போன்ற படங்கள் அப்படித்தான் உருவானது.
நிஜமான ஹீரோ
அதுபோல அவர் ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்த தொண்டன் படமும் சமூக அக்கறை கொண்டு தான் எடுக்கப்பட்டது. அந்த வகையில் அவர் நேர்மைக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களிலேயே ஆரம்ப காலத்தில் பல படங்களில் நடித்தார்.
Also read: அமரன் படம் எடுக்க இந்த இயக்குனர்தான் காரணமா?.. கமலே கூப்பிட்டு பாராட்டி இருக்கிறாரே!..
அந்த வகையில் அவர் சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல. நிஜத்திலும் அவர் தான் ஹீரோ என்பதை அவர் மக்களுக்கு செய்யும் சேவைகள் மூலம் நிரூபித்து விட்டார். அப்படி என்னதான் செய்தாருன்னு பார்க்கலாமா...
ஜெனரேட்டர் உதவி
2018ல் சென்னையை புயல் புரட்டிப் போட்டது. அப்போது உணவுப் பொட்டலங்களை அரசு மற்றும் தன்னார்வலர்கள் என நிறைய பேர் கொடுத்தனர். ஆனால் கரண்ட் யார் கொடுப்பது? எவ்வளவோ மரங்கள் விழுந்து கிடக்கும்போது அதை சீர் செய்யவே மாதக்கணக்கில் ஆகும்.

saattai
அந்த நிலையில் ஊரில் உள்ளவர்களை எப்படி அங்குள்ள மக்கள் தொடர்பு கொள்வது? செல்போனில் எப்படி சார்ஜ் போடுவது என்பதற்காக சமுத்திரக்கனி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனரேட்டையே அனுப்பி வைத்துள்ளார்.
இலவச இதய அறுவை சிகிச்சை
தன் சொந்த ஊர் மக்களுக்கு விநாயகர் கோவில் கட்டி கொடுத்து இருக்காரு. வருஷா வருஷம் அன்னதானம் பண்ணுவாரு. ஏழை எளிய மக்களுக்கு உதவுவாரு. 1000 பேருக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்ய உறுதி அளித்து 170 பேருக்கு நிறைவேற்றி இருக்காரு. இதை எல்லாம் வெளியே சொல்ல மாட்டாரு என்பது தான் அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.
காசா முக்கியம்?
Also read: வா செல்லம் உனக்குதான் வெயிட்டிங்!.. கொழுக் மொழுக் அழகை காட்டி இழுக்கும் தர்ஷா குப்தா!..
எத்தனையோ நடிகர்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். ஆனா எத்தனை பேருக்கு இந்த மனசு இருக்குன்னு பாருங்க? அப்படிப்பட்ட மனசைத் தான் பெரியவங்க கடவுள்னு சொல்றாங்க. நல்லது செய்றதுக்கு பணம் முக்கியமல்ல. மனம் என்பதே உண்மை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.