அப்ப விரட்டி விட்டாங்க!.. இப்ப கூப்பிடுறாங்க!.. இந்தியன் 2 அனுபவம் பேசும் சமுத்திரக்கனி...

by சிவா |
samuthirakani
X

தமிழ் சினிமாவில் நடிகரோ, இயக்குனரோ வாய்ப்பு என்பது சரியாக அமைய வேண்டும். சிலருக்கு வாய்ப்பு உடனே கிடைத்துவிடும். சிலருக்கு பல வருடங்கள் ஆகும். சினிமா அவ்வளவு சீக்கிரத்தில் ஒருவரை ஏற்றுக்கொள்ளாது. பல போட்டி, பொறாமைகள், காழ்ப்புணர்ச்சிகளை தாண்டி முன்னேற வேண்டியிருக்கும்.

இதில் தாக்குபிடிப்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும். நினைத்த இடத்தை அடைய பல வருடங்கள் ஆகும். தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் ஊரிலிருந்து வந்தவர்தான் எஸ்.ஜே.சூர்யா. ஆனால், சினிமா அவரை இயக்குனராக மாற்றியது. குஷி, வாலி என இரண்டு படங்களை பெரிய நடிகர்களை வைத்து எடுத்தார்.

இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு விடுமுறை! இத செய்ய தவறிட்டாரே அஜித்? பொங்கி எழும் பிரபலம்

அதன்பின் நடிக்கும் ஆசையில் அவரே ஹீரோவாக மாறினார். நியூ, அன்பே ஆருயிரே, இசை என சில படங்களை இயக்கினார். பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. அதன்பின் சினிமாவில் வில்லனாக நடிக்க துவங்கினார். பல வருடங்கள் கழித்து மாநாடு மற்றும் மார்க் ஆண்டணி போன்ற படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியிருக்கிறது.

அதேபோல்தான் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி. எல்லோரும் படம் எடுத்தால் இவர் படத்தில் பாடம் எடுப்பார். அறிவுரை சொல்லும் வேடம் என்றாலே கூப்பிடு சமுத்திரக்கனியை என்கிற அளவுக்கு பிரபலமானார். மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் படங்களை இயக்கியவர் இவர்.

இதையும் படிங்க: 80களில் சிறகடித்துப் பறந்த சின்னக்குயில் சித்ரா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?..

ஆனால், நல்ல படங்களை ரிலீஸ் செய்வதில் இருக்கும் சிக்கல்களை பார்த்து வெறுத்துபோன சமுத்திரக்கனி இப்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். அதிலும், தெலுங்கு சினிமா இவரை கொண்டாடி வருகிறது. அங்கு பல படங்களிலும் வில்லனாக நடித்துவிட்டார். சமீபகாலமாக நல்ல வேடங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சமுத்திரக்கனி ‘ஷங்கர் இந்தியன் படத்தை எடுத்தபோது அவரிடம் உதவியாளர் அல்லது நடிக்க ஏதேனும் வாய்ப்பு தேடி அலைந்தேன். என்னை உள்ளேயே விடவில்லை. இப்போது இந்தியன் 2 படத்தின் கதையை எழுதும்போது ’இந்த கதாபாத்திரத்தை எழுதும்போதே உங்கள் பெயரை எழுதிவிட்டேன்’ என ஷங்கர் சொல்கிறார். சந்தோஷமாக இருக்கிறது’ என சமுத்திரக்கனி தெரிவித்திருக்கிறார்.

Next Story