More
Categories: Cinema News latest news

இதனால் தான் விஜய் தளபதியாக இருக்கிறார்.. சங்கீதா க்ரிஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

Vijay: தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் பற்றியும், அவருடன் வாரிசு ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றையும் சங்கீதா பகிர்ந்து இருக்கிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சங்கீதா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்தவர்.

தமிழில் பல படங்கள் நடித்தாலும் பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்தது தான் ரசிகர்களிடம் பெரிய அப்ளாஸை வாங்கி கொடுத்தது. மேலும் சங்கீதாவுக்கு வாய்ப்புகள் வந்தது. இருந்தும் அவரால் பெரிய அளவில் சினிமாவில் வெற்றிகளை பெற முடியவில்லை. இருந்தும் தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஷங்கருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையே பனிப்போரா? மீண்டும் இணையுமா இந்த வெற்றிக்கூட்டணி?

சமீபத்தில் விஜயின் வாரிசு படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்து இருந்தார். இதை தொடர்ந்து சங்கீதா அளித்த சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார். அதிலிருந்து, என்னுடைய மகள் முதல் பிறந்தநாளுக்கு வந்து இருப்பார். எனக்கும், விஜயுக்கும் 25 வருட நட்பு இருக்கிறது. ஆனால் ஒருவர் மாறாமலே இருக்கிறார் என்றால் அது விஜய் தான்.

அவரை ஒரே மாதிரியாக அவரை மட்டுமே பார்க்கிறேன். அன்பை கூட வெளிப்படுத்தாதவர். பெரிசாக பேசிக்கொண்டு இருக்க மாட்டார். ஒரு துளி கூட வேஸ்ட் பண்ண மாட்டார். அது சாப்பாடாக இருந்தாலும் கூட நேரமாக இருந்தாலும் கூட வேஸ்ட் பண்ணுவது பிடிக்காது. அவருக்கு கொடுக்கும் 1 ரூபாயிற்கு கூட முழு ஒத்துழைப்பை கொடுப்பார். மேடையில் பேசுவது தான் அவர் குணம்.

இதையும் படிங்க: சீரியஸான சீனில் வசனத்தை மாற்றி சொன்ன நடிகர்.. விஜய் அடித்த கமெண்ட்.. செம நக்கல்தான்!..

அட்வைஸ் பண்ண விரும்ப மாட்டார். ஆனால் சொல்லுவதை கூட எளிமையாக தான் சொல்வார். வாரிசு படப்பிடிப்பில் கூட ஷாம் எப்போதும் விஜயை வம்புக்கு இழுத்து கொண்டே இருப்பார். அப்போ கூட கோபப்படாமல் அமைதியா இருடா என கடந்து செல்வார். தன்னுடைய புகழை எங்குமே பயன்படுத்த விரும்பாதவர் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Published by
Akhilan

Recent Posts