அத்தனை கேமராக்களுக்கு முன்னாடி மனைவியை கட்டிப்புடிச்சு கொஞ்சும் ரெடின் கிங்ஸ்லி!.. கொடுத்து வச்சவரு!..

கடந்த டிசம்பர் 10ம் தேதி ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதா திருமணம் செய்துக் கொண்ட நிலையில், ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாளை சர்ப்ரைஸ் ஆக அவரது மனைவி சங்கீதா கொண்டாடி உள்ளார். தனியாக ஒரு இடத்தில் பர்த்டேவுக்காக தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தனது கணவரை அங்கே அழைத்து வந்து ஹேப்பி ஆக்கினார் சங்கீதா.
கேமராமேன்கள் எல்லாம் போட்டோக்களும் வீடியோக்களும் எடுத்துக் கொண்டிருக்க தனது மனைவியை கட்டிப்பிடித்து கொஞ்சும் காட்சிகள் எல்லாம் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: லியோவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த பிரபாஸ்!. சலார் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
டான்ஸராக சினிமாவில் அறிமுகமான ரெடின் கிங்ஸ்லிக்கு எந்தவொரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. தனியாக தொழில் செய்துக் கொண்டிருந்த அவரை அவரது நண்பர் நெல்சன் வேட்டை மன்னன் படத்தில் அறிமுகம் செய்ய நினைத்தார். ஆனால், அந்த படத்தை சிம்பு தொடராத நிலையில், அது டிராப் ஆனது.
அடுத்து நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின், ஆர்.எஸ். சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்த கோலமாவு கோகிலா படத்தில் அறிமுகமான ரெடின் கிங்ஸ்லியை ரசிகர்கள் வித்தியாசமாக பார்த்து சிரித்தனர். எல்கேஜி படத்திலும் பயங்கரமாக நடித்து ஸ்கோர் செய்திருப்பார்.
இதையும் படிங்க: தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா!.. தீபிகா படுகோன், ஹ்ரித்திக் ரோஷன் கெமிஸ்ட்ரியை பார்த்தீங்களா!
டாக்டர் படத்தில் ரெடின் கிங்ஸ்லிக்கு போலீஸ் கதாபாத்திரம் கொடுத்து அவரது திறமையை நெல்சன் பயங்கரமாக பயன்படுத்தி இருப்பார். தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படம் வரை நெல்சன் படங்களில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி. அடுத்து கவின் படத்தில் நடித்து வருகிறார். அதற்காக மைசூர் சென்றிருந்த நிலையில், அங்கேயே எளிமையான முறையில் சாமுண்டேஸ்வரி கோவிலில் இருவரது திருமணமும் நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு வரும் கணவரின் பிறந்தநாளை சங்கீதா கொண்டாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..
https://www.instagram.com/reel/C1KaLLzRHX8/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==