வடக்குப்பட்டி ராமசாமி சந்தானமா இது!.. என்னப்பா இப்படி அழறாரு.. பக்கத்துல தமன்னா, பூஜா என்ன பண்றாங்க?
வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் கடவுளை வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் நபராக சந்தானம் நடித்திருப்பார். அந்த படம் பெரிதாக வசூல் ஈட்டவில்லை என்றாலும், போதுமான லாபத்தை படக்குழுவுக்கு கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
குறிப்பாக ஓடிடியில் விற்பனை செய்யப்பட்டு நேற்று அமேசான் பிரைமில் வெளியாகி விட்டது. ஆனால், இன்னமும் ரஜினிகாந்தின் லால் சலாம் மற்றும் அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் 1 படங்கள் ஓடிடியில் வியாபாரம் ஆகவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: மகளிர் தினத்தை மஜாவா கொண்டாடிய நயன்தாரா.. F1 கார் ரேஸ் வேற.. சும்மா கலக்குறாரே!..
மகா சிவராத்திரியை முன்னிட்டு நடிகர் சந்தானம் இந்த முறை ஈஷா யோகா மையத்துக்கு சென்றுள்ளார். அங்கே ஜக்கி வாசுதேவ் “ஓம் நமச்சிவாயா” என சொல்ல சொல்ல சந்தானம் கண்களில் கண்ணீர் குளமாக கொட்டுகின்றன. இதுதான் உருகி உருகி சாமி கும்பிடுறதோ என ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும், சந்தானத்தை போலவே நடிகைகள் தமன்னா மற்றும் பூஜா ஹெக்டே இந்த வருஷமாவது பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் ஒரே ஒரு அரபிக் குத்து மற்றும் காவாலா பாட்டுக்கு மட்டுமே ஆட வைத்துவிடுகின்றனர். அப்படி இல்லாமல் நயன்தாரா, சமந்தா, ஜோதிகா, ராஷ்மிகா மந்தனா போல படம் முழுக்க பர்ஃபார்ம் பண்ணும் கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என சிவராத்திரியில் உருகி வேண்டிக் கொண்ட வீடியோக் காட்சிகளும் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க:ஆரம்பமே அதிருதே!.. விஜய் ஆரம்பித்து வைத்த அந்த செயலி.. ஒரு மணி நேரத்தில் முடங்கிய்து.. என்ன ஆச்சு?
சங்கர் மகாதேவன் பாட்டுப் பாட சத்குரு ஜக்கி வாசுதேவ் மகா சிவராத்திரி விழாவில் நடனமாட பக்தர்களுடன் பிரபலங்களும் பரவசம் அடைந்தனர்.