டைரக்டர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆனால், அந்த நிகழ்ச்சி பெரிதளவில் வைரல் ஆகவில்லை.
அடுத்த வாரம் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ஏகப்பட்ட தியேட்டர்கள் அந்த படத்துக்கு அதிக ஸ்கிரீனை ஒதுக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், சந்தானம் படத்துக்கு குறைவு என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அரண்மனை 4 கல்லா கட்டுச்சா?.. காணாமல் போச்சா?.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?..
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான டிடி ரிட்டன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி படங்கள் ஓரளவுக்கு வசூல் ஈட்டி வெற்றிப்படமாக மாறின. அதனால் தனது சம்பளத்தை அதிரடியாக 10 கோடி ரூபாய் வரை அவர் ஏற்றிவிட்டார் என்று கூறுகின்றனர்.
சிறு பட்ஜெட் படங்களுக்கு குறைவான சம்பளத்தை எல்லாம் சந்தானம் வாங்குவதில்லை என்றும் இதன் காரணமாக அடுத்த வாரம் வெளியாக உள்ள இங்கு நான் தான் கிங்கு திரைப்படம் வெற்றி பெறுமா? என்கிற குழப்பத்தில் தயாரிப்பாளர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: அறிவிப்போடு நின்று போன ரஜினியின் திரைப்படங்கள்! மோதலில் முடிந்த திரைப்படத்தின் கதை தெரியுமா?
இந்த ஆண்டு வெளியான பல படங்கள் 10 கோடி ரூபாய் கூட வசூல் செய்யாத நிலையில் சந்தானம் படத்துக்கும் அதே நிலமை நடக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் படம் பெரிதளவில் இன்னமும் பிசினஸ் செய்யப்படாத நிலையில், சந்தானம் தனது சம்பளத்தை கொஞ்சம் கூட குறைக்காமல் அதிகரித்துக்கொண்டே போவது பல தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் ஆழ்த்தி வருவதாக கூறுகின்றனர்.
அடுத்ததாக ஆர்யா தயாரிப்பு சந்தானம் நடித்து வரும் படத்திற்கும் அவர் அதிக சம்பளத்தை கேட்டிருப்பதாக பேச்சுக்கள் வைரலாகி வருகின்றன. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றி காரணமாக சந்தானத்தின் இங்கு நான் தான் கிங்கு திரைப்படமும் காமெடி ரகளையால் ஓடிவிட்டால் மேலும் சம்பளத்தை ஒரு அதிகரித்து விடுவார் என்று கூறுகின்றனர். அதே நம்பிக்கையை தயாரிப்பாளருக்கும் சந்தனம் கொடுத்து இருக்கிறாராம்.
இதையும் படிங்க: தங்கலான் விக்ரமுக்கே டஃப் கொடுக்கும் கவின்!… நெல்சனின் முதல் படமே தாறுமாறா இருக்கே!…
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…