மார்க் ஆண்டனி லுக்கில் மாஸ் காட்டுறாரே! புதிய பட போஸ்டருடன் பொங்கல் வாழ்த்து கூறிய சந்தானம்

by Rohini |
san
X

san

Actor Santhanam: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். பல முன்னணி ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் நடிகராக தற்போது சந்தானம் வளர்ந்து கொண்டிருக்கிறார். தனக்கென ஒரு பாணியில் நடித்து மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் காமெடி நடிகராக அசத்திய சந்தானம் நாமும் ஹீரோவாக நடித்தால் என்ன ? என்ற எண்ணத்தில் நடித்த படம்தான் அறை எண் 305ல் கடவுள். அந்தப் படம் மக்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: அஜித் 63 படத்தில் இணையும் பிரபலங்களின் லிஸ்ட் இதோ!.. பொங்கல் விருந்தாக வெளியான அறிவிப்பு…

அவர் ஹீரோவாக நடித்த படங்களில் தில்லுக்கு துட்டு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,இனிமே இப்படித்தான், சக்க போடு போடு ராஜா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தன.

san

san

இந்த நிலையில் அவரது நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படம் ப்ரடக்‌ஷனில் இருப்பதால் இன்று பொங்கல் அன்று படக்குழு அந்தப் படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டிருக்கிறது. இது கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்த ஒரு புகழ்பெற்ற காமெடிக் காட்சியில் வரும் ஒரு வசனமாகும்.

இதையும் படிங்க: பொங்கலுக்கு கூட நிம்மதியா இருக்க விடமாட்டாரே!… சத்தம் போட்ட ரஜினி பக்கத்து வீட்டு பெண்!…

அதை வைத்துதான் இந்தப் படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக்தான் இயக்குகிறார்.

கார்த்திக் இரண்டாவது முறையாக சந்தானத்துடன் கூட்டணி அமைக்கும் இந்தப் படத்தை பீப்பிள் பிலிம் பேக்டரி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இதையும் படிங்க: அஜித் பட ஹீரோயினுக்கும் எனக்கும் லவ்வா? பல நாள் உண்மையை போட்டுடைத்த பிரபலம்

மேலும் விவரம் அறிய : https://x.com/iamsanthanam/status/1746815375835378087?s=20

Next Story