குன்னூரில் குளுகுளுனு நடந்த சரண்யா பொன்வண்ணன் மகள் நிச்சயதார்த்தம்.. கிளாசிக்கான புகைப்படம்

Published on: December 10, 2025
saranya
---Advertisement---

Saranya ponvannan:

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸை தன் பக்கம் தக்க வைத்திருப்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவருடைய இரண்டாவது மகள் நிச்சயதார்த்தம் தற்போது குன்னூரில் நடைபெற்றிருக்கிறது. அது சம்பந்தமான புகைப்படம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. குன்னூரில் மிக எளிமையாக நடைபெற்ற தன் மகளின் நிச்சயதார்த்தத்தை பெருமிதத்துடன் பார்த்து வருகிறார் சரண்யா பொன்வண்ணன்.

குன்னூரில் ஒரு எஸ்டேட்டில் அழகான செட் அமைத்து அந்த செட் முழுவதும் ஒரிஜினல் வண்ண ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கே ஒரு ஃபீல் குட் மொமன்டாக இருக்கிறது. நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சரண்யா பொன்வண்ணன் அப்போதுதான் அறிமுகமாகிறார். இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்களுக்கு சரண்யா பொன்வண்ணன் தான் அம்மாவாக நடித்து வருகிறார்.

இவருடைய இரண்டாவது மகள் தான் சாந்தினி. சரண்யாவும் அவரது கணவர் பொன்வண்ணனும் சினிமாவில் ஒரு முக்கிய அந்தஸ்தில் இருந்தாலும் தன் இரு மகள்களையும் சினிமா பக்கமே வரவிடவில்லை. இருவரையும் நன்றாக படிக்க வைத்து இருவரையும் டாக்டராக்கியிருக்கிறார் சரண்யா. அதுமட்டுமில்லாமல் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சரண்யா பொன்வண்ணனும் ஃபேஷன் டிசைனிங் செய்து வருகிறார்.

பல பேருக்கு தொழில் கற்றுக் கொடுத்து வருகிறார். தன் இருமகள்களுக்காக சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் சரண்யா. தன் இரு மகள்களும் நன்கு வளர்ந்த பிறகே மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தேசிய விருது வென்ற நடிகை சரண்யா பொன்வண்ணன். இந்த நிலையில்தான் இரண்டாவது மகள் சாந்தினிக்கும் டானின் என்பவருக்கும் இன்று குன்னூரில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

இவர்கள் நிச்சயதார்த்ததிற்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்கள் வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DSEpsnRkZpA/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.