Connect with us
sarojadevi

Cinema History

எம்.ஜி.ஆரை பார்த்து ‘இவர் யார்?’ எனக்கேட்ட சரோஜா தேவி!… இப்படியெல்லாம் நடந்துச்சா!..

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர்தான் நடிகை சரோஜா தேவி. எம்.ஜி.ஆருடனும், சிவாஜியுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்த நடிகை இவர்தான். இவருக்கு அடுத்த இடத்தில்தான் ஜெயலலிதா இருக்கிறார்.

ரசிகர்களின் கனவு கன்னியாக பல வருடங்கள் இருந்தவர். இந்திய அரசால் வழங்கப்படும் பத்ம விபூஷன் உட்பட பல உயரிய விருதுகளை பெற்றவர் இவர்.1950ம் வருடம் சினிமாவில் நுழைந்த சரோஜா தேவி 1980 வரை சுமார் 161 படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில், குணசித்திர வேடத்தில் அவர் நடித்ததையும் சேர்த்தால் மொத்த எண்ணிக்கை 200ஐயும் தாண்டும்.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் தாய்மொழியான கன்னடத்திலும் நிறைய படங்களில் சரோஜா தேவி நடித்திருக்கிறார். பள்ளியில் படிக்கும்போது நன்றாக பாடுவது, நடனம் என அனைத்திலும் சிறப்பாக விளங்கினார். அப்போது ஒருநாள் பள்ளியின் சிறப்புவிருந்தினராக போன பொன்னப்ப பகவாதர் எனும் நடிகர் சரோஜாதேவியின் அழகை பார்த்து அவரை சினிமாவில் நடிக்க அழைத்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவா?.. சரோஜாதேவியா?!.. ஏ.எம்.வீரப்பன் செய்த வேலையில் கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்…

ஆனால், சரோஜாதேவிக்கு சினிமாவில் நடிப்பதில் கொஞ்சமும் ஆர்வம் இல்லை. நன்றாக படித்து ஆசிரியை ஆகிவிட வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. எனவே, நடிக்க மறுத்தார். ஆனால், அம்மா சொன்னதால் அந்த படத்தில் நடித்தார். அந்த படத்தின் பெயர் மகாகவி காளிதாஸ். இந்த படத்தில் நடிப்பதற்காகத்தான் முதன் முதலில் சென்னை வந்தார் சரோஜா தேவி.

அந்த படம் வெற்றியடையவே மீண்டும் ஒரு படம்.. மீண்டும் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்துவிட்டு பெங்களூருக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு போக துவங்கிவிட்டார். அப்போது ஒரு நாள் தமிழ் சினிமாவின் பிதாமகன் என போற்றப்பட்ட கே.சுப்பிரமணியம் அவரின் வீட்டுக்கு வந்தார்.

டி.ஆர்.ராஜகுமாரி கதாநாயகியாக நடித்த ‘கச்ச தேவயாணி’ என்கிற படத்தின் கன்னட ரீமேக்கில் நீ நடிக்க வேண்டும். இந்த படம் மூலம் நீ பெரிய புகழை பெறுவார் என அவர் கூறினார். ஆனால், சரோஜாதேவிக்கு அதில் விருப்பமில்லை. ஆனால், அம்மா வற்புறுத்தியதால் அந்த படத்திலும் சரோஜா தேவி நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள விஜய வாகிணி ஸ்டுடியோவில் நடந்தது.

இதையும் படிங்க: நாளைக்கு உன்ன கல்யாணம் பன்றேன்!.. சரோஜாதேவியை அதிரவைத்த சின்னப்பா தேவர்…

அப்போதுதான் எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு சரோஜா தேவிக்கு கிடைத்தது. அந்த படப்பிடிப்பில் வந்த எம்.ஜி.ஆர் ‘யார் இந்த பெண்?’ என இயக்குனர் பந்துலுவிடம் கேட்க அவரை பற்றி சொல்லப்பட்டது. அதையடுத்து சரோஜாதேவியிடம் கன்னடத்தில் ஓரிரு வார்தைகள் வார்த்தை பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் எம்.ஜி.ஆர்.

இதுபற்றி ஒரு பேட்டியில் பேசிய சரோஜாதேவி ‘எம்.ஜி.ஆரை முதன்முதல் பார்த்தபோது சூரியனே படப்பிடிப்பு தளத்திற்கு வந்தது போல இருந்தது. அப்படி ஒரு பிரகாஷம். என்னிடம் பேசிவிட்டு அவர் போனதும் ‘யார் இவர்?’ என்று கேட்டேன். ‘யார் இவரா?. இவர்தான் எம்.ஜி.ஆர்’ என அங்கிருந்தவர்கள் சொன்னதும் எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அவர் போகும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதன் அவர் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன்பின் அவருடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்கவே முடியாது’ என உருகி இருக்கிறார் சரோஜாதேவி.

google news
Continue Reading

More in Cinema History

To Top