More
Categories: Cinema News latest news

அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா இவர தூக்கி சாப்பிட்ருவாங்க!.. சூதானமா இருக்கணும் சூரி..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராய் அறிமுகமானவர் நடிகர் சூரி. மதுரையை சேர்ந்த இவர் கிராம பாங்கான கதைகளை நடிப்பதில் வல்லவர். சந்தானம் முதலிய காமெடி நடிகர்கள் இருக்கும் பட்சத்தில் இவரின் மதுரை பேச்சினாலேயே பல படங்களில் வாய்ப்பினையும் பெற்று கொண்டார்.

வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார். பின் வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைபடங்களின் மூலம் தனது காமெடிக்கென தனி மக்கள் பட்டாளத்தையே சம்பாதித்தார். இவர் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த காமெடிகள் அனைத்துமே பெரிய வெற்றியை கண்டது.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:ஒரு கோடி சம்பளமாக வாங்கிய ஒரே படம்… தயாரிப்பாளரையே தப்பாக நினைத்த சிவாஜி கணேசன்!

பின் காமெடி நடிகராய் இருந்த இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரான விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். போலிஸ் ஜீப் ஓட்டுனராய் தனது நடிப்பினை மிக தெளிவாக காட்டியிருந்தார். இப்படம் மிக பெரிய வெற்றியையும் சம்பாதித்தது.

அதன்பின் இவர் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூரியின் காட்சிகள் முடிவடைந்த நிலையில் தற்போது படக்குழு விஜய் சேதுபதிக்கான காட்சிகளை தயாரித்து வருகின்றனர். இப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையும் வாசிங்க:டூயட் ஆட முடியலைனாலும் மச்சக்காரன்தான்பா! ரெண்டு ஹீரோயின்களை தட்டித் தூக்கிய அஜித்

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக சூரிதான் நடிக்க உள்ளாராம். மேலும் இப்படத்தில் கெளரவ வேடத்தில் இரு முக்கிய பிரபலங்களும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இப்படத்தில் நாடோடிகள், சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் நடித்த சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்க உள்ளனராம். சசிக்குமார் பல படங்களில் நடித்து வரும் நிலையில் இப்படத்தில் சூரிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக இப்படத்தில் நடிக்க உள்ளாராம். பொதுவாக இவர்களின் நடிப்பில் வரும் திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெரும். அதைபோல் இப்படமும் நல்ல ஒரு வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க:மஞ்சள் வீரன் டைரக்டர் லெவலுக்கு இறங்கிய அட்லீ… தம்பி இதெல்லாம் ரொம்ப ஓவரு!

Published by
amutha raja