நடிகையை ஏமாற்றி நடிக்க வைத்த சசிக்குமார்... அட அந்த சூப்பர்ஹிட் படமா?
2008ல் வெளியான சூப்பர்ஹிட் படம் சுப்பிரமணியபுரம். இந்தப் படத்தில் முக்கியக் கேரக்டரில் நடிக்க வைக்க ஒரு காதல் ஜோடி தேவைப்பட்டது. அது வேறு யாருமல்ல. நடிகர் ஜெய், நடிகை சுவாதி தான். இந்தப் படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருக்கும். கண்கள் இரண்டால் என்ற அந்த ஒரு பாடலே போதும். படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வந்த புதிதில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் ஒட்டுமொத்தமாக திரையரங்கிற்குப் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்தப் படத்தில் இந்தக் காதல் ஜோடி எப்படி நடிக்க வந்தது என்பது சுவாரசியமான விஷயம். வாங்க. அதைப் பற்றிப் பார்ப்போம்.
சென்னை - 600028 என்ற படம் அப்போது ரிலீஸ் ஆகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருந்தது. சுப்பிரமணியபுரம் படத்திற்கு நடிகரைத் தேடி அலைந்து கொண்டு இருக்கிறார் இயக்குனர் சசிக்குமார். அப்போது சென்னை- 600028 படத்திற்கான போஸ்டரைப் பார்க்கிறார். அதில் இருந்த பல முகங்களில் ஒரு முகம் இவருக்குப் பிடித்து விட்டது. அதுதான் ஜெய். உடனே அவரை அழைத்து நீண்ட தலைமுடியும், தாடியும் வைத்துக் கொண்டு வா. கேரக்டர் ரெடியாக இருக்கிறது என்கிறார். அதே போல வருகிறார். அப்படித் தான் ஜெய் படத்திற்குள் வந்தார்.
அதே போல ஒரு முறை தெலுங்கு நடிகையான சுவாதியையும் சந்திக்கிறார். அவரிடம் இந்தப் படத்தில் நடிக்கிற வாய்ப்பு பற்றி சொல்ல அவரும், படத்தின் முடிவு எப்படி சோகமா, மகிழ்ச்சியா என கேட்கிறார். அதற்கு மகிழ்ச்சியான முடிவு தான் என்கிறார். அதன்பிறகு சம்மதம் தெரிவிக்கிறார். கண்கள் இரண்டால் பாடலை மட்டும் எடுத்து அவரிடம் போட்டுக் காட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க... கில்லி பாத்துட்டு உன்ன லவ் பண்ணேன்… பிரகாஷ்ராஜிடம் சண்டை போட்ட பெண்மணி!…
அதன்பிறகு அவர் மகிழ்ச்சி என்று சொல்லி இருக்கிறார். ஆனால் படத்தின் முடிவில் ஜெய் இறந்து விடுகிறார். என்ன நீங்க மகிழ்ச்சியான முடிவு என சொன்னீங்களே என சசிக்குமாரிடம் சுவாதி சண்டை போட, அதன்பிறகு அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம் சசிக்குமார். அப்புறம் படம் ரிலீஸாகி பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.