2026-ல் சீமான்-விஜய் அரசியல் கூட்டணி?... தேர்தலில் களமிறங்கும் தளபதி?... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…
பல ஆண்டுகளாக விஜய், அரசியலுக்கு வரப்போகிறார் என்று பேச்சுக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான முதல் படியாக சில ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அதற்கான கொடியையும் வெளியிட்டார் விஜய்.
மேலும் சமீப காலமாக அடிக்கடி தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருகிறார். அதே போல் சில மாதங்களுக்கு முன்பு திராவிட இயக்கத்தை சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதியை தனது வீட்டிற்கே அழைத்து வந்து தமிழக அரசியல் குறித்து கலந்துரையாடினார் எனவும் தகவலும் வந்தது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த திண்டுக்கலை சேர்ந்த மாணவி நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அதே போல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்டந்தோறும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவியர்களுக்கு விஜய் கல்வித்தொகை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டந்தோறும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவியர்களுக்கும் கல்வித்தொகை வழங்கவுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு விஜய்யின் நடவடிக்கைகள் அரசியல் நுழைவை நோக்கியே இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளரான சீமான், “விஜய் அரசியலுக்கு வருவதை நாம் வரவேற்கவேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நான் மட்டுமே போராடி வருகிறேன். விஜய் வந்தால் அவரும் ஒரு பக்கம் நின்று போராடட்டும். அவருக்கு இஷ்டம் இருந்தால் இருவரும் இணைந்து கூட செயல்படுவோம்” என கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர், “விஜய் 2026 ஆம் ஆண்டு நிச்சயமாக அரசியலுக்குள் வந்துவிடுவார். அவர் வருவதுதான் சரியானது” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை இலியானா.. பிரபல நடிகை வெளியிட்ட போட்டோக்களால் ஏற்பட்ட பரபரப்பு!