ஆல் ஏரியாவுல அய்யா கில்லிடா!. 2 நாட்களில் இப்படியொரு வசூலா!.. பாக்ஸ் ஆபிஸ் சரவெடியாய் மாறிய ஜவான்!..

Published on: September 9, 2023
---Advertisement---

ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, சஞ்சய் தத், யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் அளவுக்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் வசூல் செய்யுமா என்கிற கேள்வி பாலிவுட் வட்டாரத்திலேயே எழுந்திருந்தது.

இதையும் படிங்க:  அந்த எழவே வேண்டாமுன்னு தானே வந்தேன்!.. சாதி, சம்பிரதாயங்களை எதிர்க்கும் சேரன்.. தமிழ்க்குடிமகன் தப்பித்ததா?

ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் நடைபெறாமல் சென்னையில் நடைபெற்றது. மேலும் பாலிவுட் பிரபலங்கள் யாருமே ஜவான் படத்தின் புரமோஷனுக்காக பங்கேற்கவில்லை. சென்னை நிகழ்ச்சிக்குப் பிறகு துபாயில் ஜவான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை ஷாருக்கான் நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் படம் ரிலீஸான முதல் நாளே 129.6 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஷாருக்கான் பட நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: துடிக்கும் கரங்கள் விமர்சனம்: கரங்கள் துடிக்குதோ இல்லையோ!.. கால்கள் துடிக்குது தியேட்டரை விட்டு ஓட!..

முதல் நாளே மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வடஇந்தியாவில் எக்கச்சக்கமாக குவிந்து வரும் நிலையில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான டிக்கெட்டுகள் மொத்தமாக விற்று தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று ஜவான் படத்தின் வசூல் அதிகப்படியாக 107 கோடி ரூபாயை உலக அளவில் வசூல் ஈட்டி உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இரண்டு நாட்களில் ஒட்டுமொத்தமாக 237 கோடி ரூபாயை ஜவான் திரைப்படம் வசூல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: கடைசி வரை கம்பி நீட்டிய விஜய்!.. நயன்தாராவை நம்பி வீணாப்போச்சே!.. அடிவாங்கிய ஜவான் வசூல்!..

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இதே வேகத்தில் ஜவான் திரைப்படத்தின் வசூல் இருக்கும் என தெரிகிறது. ஜெட் வேகத்தில் ஜவான் திரைப்படத்தின் வசூல் முதல் வார முடிவில் 500 கோடி ரூபாயை உலக அளவில் தொடும் என்றும் கணித்து வருகின்றனர்.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.