More
Read more!
Categories: Cinema News latest news

ட்ரிபிளா திருப்பிக் கொடுக்கிறதுனா இதுதான்!.. ஜவான் 3வது நாளில் செய்த பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்!..

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ இன்று ஷங்கரை விட மிகப்பெரிய இயக்குநராக இந்திய சினிமாவே யாருடா இந்த தமிழ்நாட்டு பையன் என திரும்பிப் பார்க்கும் அளவுக்கு ஜவான் படத்தின் மூலம் மரண மாஸ் சம்பவத்தை செய்து பாலிவுட்டில் மெர்சல் காட்டி உள்ளார்.

ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் அதிகாரப்பூர்வமாக 129.6 கோடி என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் அறிவித்து விட்டது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஒத்த போஸ்டர்ல மொத்த சோலியும் முடிச்சிட்டீங்களே!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதை இதுதானா!

மாஸ், கமர்ஷியல், ஆக்‌ஷன், சென்டிமென்ட், சோஷியல் மெசேஜ், எமோஷனல் என அனைத்தையும் கலந்து கட்டி கம்ப்ளீட் பேக்கேஜாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு அட்லீ கொடுத்த மெகா ஃபீஸ்ட்டு தான் இந்த ஜவான் திரைப்படம்.

2ம் நாளில் அதிகபட்சமாக 240 கோடி ரூபாயை இந்த படம் வசூல் ஈட்டிய நிலையில், மூன்றாவது நாள் வசூலும் உலகளவில் தெறி மாஸ் காட்டியுள்ளது.

இதையும் படிங்க: மூஞ்சியே காட்டாமல் முன்னழகை மொத்தமாக காட்டிய நயன்தாரா!.. ஆனா இதுலயும் பிசினஸ் இருக்கா?..

வேர்ட்ல் வைட் ஒட்டுமொத்தமாக 360 கோடி ரூபாய் வசூலை ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ரெட் சில்லீஸ் இன்று அறிவிக்கும் என தெரிகிறது.

மேலும், ஞாயிற்றுக்கிழமையான இன்று ஜவான் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூடுதலாக 140 கோடி வசூல் வந்தால்  500 கோடி வசூலை 4 நாட்களில் ஜவான் திரைப்படம் அடைந்த பெருமையை பெறும் என ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

Published by
Saranya M

Recent Posts