Home > Cinema News > விஜயுடன் நடிக்க மாட்டேன்!.. கண்டிஷன் போட்டு நடிக்க வந்த ஷகீலா.. அட அந்த படமா!..
விஜயுடன் நடிக்க மாட்டேன்!.. கண்டிஷன் போட்டு நடிக்க வந்த ஷகீலா.. அட அந்த படமா!..

X
Shakeela: நடிகை ஷகீலா எப்போதுமே சர்ச்சை கருத்துக்களை பேசியே ட்ரெண்ட் ஆகி விடுவார். அந்த வகையில் தற்போது அவர் விஜய் குறித்து சொல்லி இருக்கும் ஒரு தகவலால் மீண்டும் அவர் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விஜய் எப்போதுமே ரொம்பவே அமைதியான சுபாவம் உடையவர். ஷூட்டிங்கில் பெரிதாக யாருடனும் பேசிக்கொள்ளவே மாட்டார். இதை பல பிரபலங்கள் தங்களுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஆரம்பகட்டத்தில் ரொம்பவே ஜாலியாக இருந்தவர் தானாம் விஜய்.
இதையும் படிங்க: அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!.. ஷங்கர் கொடுத்த சரியான பதிலடி!.. எப்பவும் மறக்க மாட்டாரு!..
அப்போதே ஷகீலாவுக்கும், விஜயிற்கும் ஒரு நட்பு இருந்ததாம். ஆனால் இப்போது அவர் வளர்ந்து விட்டதாலும் சரியாக பேசமாட்டார் என்பதாலும் ஷகீலாவை அழகிய தமிழ் மகன் படத்தில் நடிக்க கூப்பிட்ட போது முதலில் தயங்கினாராம். பின்னர் விஜயுடன் காட்சிகள் இல்லை என்றால் நடிக்க வருவதாக ஒப்புக்கொண்டாராம்.
இயக்குனரும் சரியென அப்படத்துக்கு ஷகீலாவை புக் செய்து விட்டனர். ஏன் ஷகீலா அப்படி சொன்னார் என்றால் இருவருக்கும் ஆரம்பத்தில் நல்ல பழக்கம் இருந்ததாம். இப்போ விஜய் யாருடனும் பேசுவதில்லை என்பதால் நான் தப்பா? நீங்க தப்பா என்ற பீலிங் வந்துருமே என்பதால் தான் ஷகீலா அப்படி சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்!. இதத்தான் கமலும் சொன்னாரு.. என்ன செய்வார் விஜய்!?…
ஆனால் படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியதாம். முதல் காட்சியே ஷகீலாவுக்கு, விஜயுடன் தானாம். என்னடா என நினைக்கும் போதே விஜய், ஹாய் ஷகீ என்றாராம். இதை கேட்ட அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தனராம். ஹாய் சொல்வதா வேண்டாமா எனத் தயங்கி நின்றாராம். அதன் பின்னரே அந்த படத்தில் நடித்து முடித்தார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
Next Story