latest cinema news

சண்முக பாண்டியனின் வானவேடிக்கை படப்பிடிப்பு நிறைவு

வானவேடிக்கை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் வானவேடிக்கை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

80,90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். குறிப்பாக பி அண்ட் சி செண்டர்களில் ரஜினியை விட இவருக்கே அதிக ரசிகர்கள் உண்டு. அரசியலிலும் எதிர்கட்சி தலைவராகவும் இருந்தவர் இவர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். விஜய்காந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரையுலகில் எப்படியும் வெற்ற்றி பெற வேண்டும் என்று போராடி வருகிறார். இறுதியாக அவர் நடிப்பில் வெளிவந்த கொம்பு சீவி படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் சண்முகப்பாண்டியன் தற்போது நடித்து வரும் படம் வான வேடிக்கை. நான் சிகப்பு மனிதன், தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய திரு இப்படத்தை இயக்குக்கிறார். கேப்ப்டன் சினி கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சரவணன், இயக்குநர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குநர் கிரண், ஜெயப்பிரகாஷ், கும்கி’ அஸ்வின் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் இதர முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]