யாரும் தரல!..கமல்தான் ஹெல்ப் பண்ணார்!.. ஷோபனா சொன்ன சீக்ரெட்!…

Published on: April 16, 2023
---Advertisement---

தமிழ் நடிகைகளில் ஒரு சில படங்களிலேயே பிரபலமாகி பெரும் ஹீரோக்களோடு நடித்தவர் நடிகை ஷோபனா. இவர் நடித்த திரைப்படங்களில் இது நம்ம ஆளு, தளபதி போன்ற திரைப்படங்கள் பிரபலமானவை.

ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு வகையான நடிப்பினை வெளிப்படுத்துபவர் ஷோபனா. இதனாலேயே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவானார்கள். இது நம்ம ஆளு திரைப்படத்தில் காமெடியான துரு துருவென இருக்கும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருப்பார்.

அதுவே தளபதி படத்தில் பார்க்கும்போது மிகவும் அடக்கமான, பேசவே பயப்படும் அமைதியான பெண்ணாக நடித்திருப்பார். ஆனால் இது நம்ம ஆளு திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து துரு துருவென இருக்கும் கதாபாத்திரங்களே அவருக்கு கிடைத்தன. இடையில் தளபதி மாதிரியான ஒரு சில படங்களில் மட்டும் அவரது கதாபாத்திரத்தில் மாற்றம் இருந்தது.

கமல்ஹாசனும், ஷோபனா நல்ல நட்பில் இருந்தனர், இப்போதும் நல்ல நட்பில் இருக்கின்றனர். கமல்ஹாசனின் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அதற்கு அவர் ஷோபனாவை அழைப்பதுண்டு. தற்சமயம் ஷோபனா தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் குறித்து ஆர்வம் காட்டி வருகிறார்.

உதவி செய்த கமல்ஹாசன்:

தமிழ் நாட்டில் உள்ள கோவில்களை ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளார் ஷோபனா. தஞ்சாவூர் பெரிய கோவிலை வைத்து ஆவணப்படம் எடுப்பதற்காக அது தொடர்பான ஆட்களை சந்தித்துள்ளார் ஷோபனா.

ஆனால் பல அலுவலகங்களில் ஷோபனாவிற்கு அனுமதி கிடைக்கவில்லை ஒரு நடிகைக்கு அனுமதி கொடுக்க முடியாது. நீங்கள் கோவிலை வைத்து படம் எடுக்கிறேன் என அதன் புனிதத்தை கெடுத்து விடுவீர்கள் என மறுத்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனிடம் உதவி கேட்டுள்ளார் ஷோபனா.

உடனே இதையறிந்த கமல்ஹாசன் தனது செல்வாக்கை பயன்படுத்தி அனைத்து அலுவலகங்களிலும் ஷோபனாவிற்கு அனுமதி பெற்று தந்துள்ளார். இதை ஷோபனா ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: எம்.எஸ்.வியிடமிருந்து காப்பி அடித்த கங்கை அமரன்… ஆனால் பாடல் செம ஹிட்… என்ன பாடல்ன்னு தெரிஞ்சா அசந்திடுவீங்க…

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.