அய்யோ எங்களுக்கு கல்யாணமே ஆகல!.. ஆனா அது நடந்துடுச்சு!.. அதிதி ராவ் - சித்தார்த் கொடுத்த ஷாக்!

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவுக்கு திருமணம் நடைபெற்று விட்டதாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதை மறுக்கும் விதமாக போஸ்ட் ஒன்றை சித்தார்த் வெளியிட்டுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் ஜெனிலியாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சித்தார்த். எனக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் வேணும் என பாட ஆரம்பித்த சித்தார்த்துக்கு திரிஷா, ஹன்சிகா மற்றும் சமந்தா என ஏகப்பட்ட கேர்ள் பிரண்ட் கிடைத்ததாக கிசுகிசுக்கள் கிளம்பின. முதல் படத்தில் நடித்த ஜெனிலியா உடன் கூட சித்தார்த் கிசுகிசுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: புறநானூறுக்கு வச்சாச்சு ஃபுல் ஸ்டாப்! கோலிவுட்டுக்கு டாட்டா.. வெளியான சூர்யாவின் உண்மையான முகம்
2018 ஆம் ஆண்டு வெளியான மகாசமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் அதிதியுடன் இணைந்து நடித்த சித்தார்த்துக்கு அதிதி மீது காதல் ஏற்பட்டது. உனக்கு 2003-ம் ஆண்டு மேக்னா நாராயணன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சித்தர் 2007-ஆம் ஆண்டு ஒரு விவாகரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகின.
நடிகை அதிதி ராவும் ஏற்கனவே சத்தியதீப் மிஸ்ரா என்பவரை 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் 2013 ஆம் ஆண்டு மனக்கசப்பு காரணமாக பிரிந்தார். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து சித்தார்த்தை சந்தித்த நிலையில், அதிதி சித்தார்த்தின் அதிதி காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சம்பளத்தை வாங்க கண்ணதாசனும், எம்.எஸ்.வியும் போட்ட நாடகம்!.. அட இது நல்லா இருக்கே!…
கடந்த சில ஆண்டுகளாகவே காதல் பறவைகளாக சுற்றித் திரிந்த இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவருக்கும் நிச்சயம் ஆகிவிட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Engaged' என பதிவிட்டு ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.