கல்யாணம் ஆகப்போற ஜோரு!.. வருங்கால கணவருடன் ரொமாண்டிக் பர்த்டே கொண்டாட்டம்.. அதிதி செம ஹேப்பி!..

நடிகர் சித்தார்த் தனது 45வது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார். இந்தியன் 2 படக்குழுவிடம் இருந்து ஸ்பெஷல் பர்த்டே போஸ்டர் ஒன்று வெளியானது. சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகிறது.
விரைவில் அந்த படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில், நேற்று நடிகர் சித்தார்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிரத்தியேக போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டது.
இதையும் படிங்க: அதுக்குப் பயந்தே அவருக்கு 3 படங்கள் கொடுத்த பாக்கியராஜ்… நடந்தது இதுதான்!..
சமீபத்தில் நடிகை அதிதி ராவுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இந்த ஆண்டு பிறந்தநாள் இருவரும் சேர்ந்து அமர்க்களமாக கொண்டாடி உள்ளனர். நடிகை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்தார்த்துடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வைரல் ஆக்கியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இணைந்து நடித்த நிலையில், இருவரும் காதல் வயப்பட்டனர். சமீபத்தில் தெலங்கானாவில் ஆதிதி ராவுக்கு சொந்தமான ஊரில் உள்ள கோயிலில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையும் படிங்க:இதுக்கு கீழே எதுவும் போடாமலே இருக்கலாம்!.. லெக் ஷோ காட்டும் சமந்தா!.. கவுந்து போன பாய்ஸ்!..
அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் வெளியிட்டாலும் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை.
1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி பிறந்த நடிகர் சித்தார்த் நேற்று தனது 45 வது பிறந்தநாளை தனது வருங்கால மனைவி அதிதி ராவுடன் குதுகலமாக கொண்டாடியுள்ளார். இந்தியன் 2 படத்தை தொடர்ந்து தக் லைஃப் படத்திலும் சித்தார்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:என்னடா சியான் 62 டைட்டிலுக்கு வந்த சோதனை!.. ஏற்கனவே அந்த நடிகர் நடிச்ச படமா வீர தீர சூரன்?..