சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்ட சித்தார்த்… மணிரத்னம் ஹீரோயினை தட்டி தூக்கிட்டாருப்பா!

Published on: March 27, 2024
---Advertisement---

Siddharth: நடிகர் சித்தார்த் தன்னுடைய  நீண்டகால காதலியான நடிகையை இன்று ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ்-தெலுங்கு திரைப்படமான மஹா சமுத்திரத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்தவர் அதிதி ராவ். இருவருக்கும் அதிலிருந்து ஒருவகையான நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் காதலில் விழுந்தனராம். அதை தங்களுடைய புகைப்படங்களில் வெளிப்படுத்தினாலும் எப்போதுமே ஓபனாக சொல்லாமல் இருந்து வந்தனர்.

இதையும் படிங்க: கமலுக்கு செல்ல வேண்டிய படத்தினை கலைத்துவிட்ட முன்னணி நடிகர்…. வெவரம் தான்!

இருவரும் விரைவில் கல்யாணம் செய்துக்கொள்வார்கள் என கிசுகிசுத்து வந்தனர். இந்நிலையில், சித்தார்த்  தன்னுடைய 44 வயதில் அதிதி ராவை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. தெலுங்கானாவில் இருக்கும் ஸ்ரீரங்கபுரத்தின் ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் இவர்கள் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை இருதரப்பில் இருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. புதுமண தம்பதிகளின் படங்கள் கூட கசியவில்லை.  வனபர்த்தி சன்ஸ்தானத்தின் கடைசி ஆட்சியராக அதிதியின் தாத்தா இருந்ததால் அதிதியின் குடும்பம் திருமணத்துக்கு இந்த கோயிலை தேர்ந்தெடுத்தனராம். 

இதையும் படிங்க: செழியன், ஜெனி பிரச்னைக்கு தீர்வு கண்டு பிடிக்க வந்துட்டாங்கப்பா!…முடிச்சி விடுங்க… முடிச்சி விடுங்க…

சித்தார்த்துக்காக தமிழ்நாட்டை சேர்ந்த ஐயர்கள் திருமண விழாவை நடத்தியதாக கூறப்படுகிறது. சித்தார்த், மேக்னா என்பவரை முதலில் திருமணம் செய்துக்கொண்டு சில வருடங்களில் விவகாரத்து செய்துவிட்டார். அதுப்போல, அதிதி நடிகர் சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டு, பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.