More
Categories: Cinema News latest news

வச்சாங்கய்யா கன்னிவெடிய! சிம்புவும் தனுஷும் ஒரே படத்திலா? இது வேற லெவல் அப்டேட்டா இருக்கே

Simbu and Dhanush: ரஜினி – கமல், அஜித் – விஜய் இவர்களுக்கு அடுத்த கூட்டணியாக தனுஷ் மற்றும் சிம்புவைத்தான் மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். தனுஷுக்கு முன்பாக சிம்பு சினிமாவில் சீனியர் என்றாலும் இருவரும் சமமான வெற்றி தோல்விகளை பார்த்து வளர்ந்தவர்கள்.

தனுஷின் வெற்றி இமாலய வெற்றியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சிம்பு ஒரு பெரிய கம்பேக் பிறகு தனது பயணத்தை தொடர ஆரம்பித்திருக்கிறார். ஹாலிவுட், பாலிவுட் என இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு தனுஷின் வளர்ச்சி பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: அன்லிமிட்டேட் அழகு அள்ளுது!. பிரியங்கா மோகனின் அழகில் குவியுது லைக்ஸ்!…

இந்த நிலையில் பால்கி இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிப்பதாக நீண்ட  நாள்களாகவே செய்திகள் வந்து கொண்டு இருந்தன.ஆனால் அதை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்விதான் இருந்து வந்தது.

கடைசியாக அதை பால்கிதான் இயக்க இருக்கிறார். மீண்டும் அந்த பயோபில் முழு நீள ஹிந்தி படமாக உருவாக இருக்கிறதா? அல்லது தமிழில் உருவாக இருக்கிறதா? என்ற சந்தேகம்தான் இருக்கிறது. எப்படி இருந்தாலும் தனுஷ்தான் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இதையும் படிங்க: விஜயகுமாரி நடிக்க வேண்டிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.. இடையிலேயே புகுந்து வாய்ப்பை பயன்படுத்திய தேவிகா…

மேலும் இந்த பயோபிக்கில் வைரமுத்துவின் கதாபாத்திரமும் வர இருக்கிறதாம். அதனால் வைரமுத்துவை போன்ற தோற்றத்தில் இருக்கும் நபரை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக இந்த பயோபிக்கிற்கு ரஹ்மான்தான் இசையமைக்கப் போகிறார் என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இளையராஜாவின் பயோபிக் என்றாலே அதில் இளையராஜா சம்பந்தப்பட்ட எல்லா கதாபாத்திரங்களும் வந்தாக வேண்டும். அதனால் ஏஆர் ரஹ்மானின் கதாபாத்திரமும் அதில் அமைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அஜித் படம் ஓடுறப்போ இந்தப் படத்துக்கு யார் வருவா? கடைசில தல படம் தலைதெறிக்க ஓடுனதுதான் மிச்சம்

அதனால் அந்த ரஹ்மான் கதாபாத்திரத்திற்கு சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதன் மூலம் ஒரே படத்தில் சிம்புவையும் தனுஷையும் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒருவித ஆச்சரியம்தான் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

Published by
Rohini

Recent Posts