Connect with us
actress devika

Cinema History

விஜயகுமாரி நடிக்க வேண்டிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.. இடையிலேயே புகுந்து வாய்ப்பை பயன்படுத்திய தேவிகா…

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு பல முன்னணி கதாநாயகர்களும் ஆசைப்படுவர். இதற்கு காரணம் அந்த இயக்குனர் படத்தின் கதையை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்துவதே ஆகும். அப்படிபட்ட இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் ஸ்ரீதர்.

இவர் தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். வெண்ணிற ஆடை, ஊட்டி வரை உறவு, கலைக்கோவில் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் புனர் ஜென்மம், உத்தம புத்திரன் போன்ற சில திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இதையும் வாசிங்க:பாகவதரின் கடைசி ஆசை என்ன தெரியுமா? மலர் தூவி நடக்க வச்ச நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா?

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த ஸ்ரீதர் பல கதாநாயகிகளையும் திரையில் அறிமுகப்படுத்தினார். இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றுதான் நெஞ்சில் ஒரு ஆலயம். இப்படத்தில் கல்யாண் குமார், தேவிகா, ஆர்.முத்துராமன் போன்ற பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

ஆனால் இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க அழைக்கப்பட்டவர் நடிகை விஜயகுமாரியாம். விஜயகுமாரி கல்யாண பரிசு, விவசாயி போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர். இவரது கணவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இப்படத்தில் விஜயகுமாரி நடிக்க அவரது கணவர் சம்மதிக்கவில்லையாம். விஜயகுமாரியும் கணவரின் சம்மதம் கிடைக்காததால் அப்படத்தில் நடிக்கவில்லையாம்.

இதையும் வாசிங்க:குண்டடி பட்டபின் கிண்டலடித்த எதிரிகள்!.. பல நாட்கள் பயிற்சி எடுத்து சாதித்து காட்டிய எம்.ஜி.ஆர்..

மேலும் அப்படத்தில் தனது மனைவி நடிக்க கூடாது என்பதற்கான காரணத்தையும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கூறவில்லையாம். விஜயகுமாரியும் கேட்டவில்லையாம். ஆனால் அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அப்போது அப்படத்தில் கதாநாயகியாக நடித்த தேவிகாவின் நடிப்பை பார்த்த விஜயகுமாரி இவ்வளவு அருமையான வாய்ப்பை தவறவிட்டதை எண்ணி வருத்தப்பட்டுள்ளார்.

இப்படி விஜயகுமாரி நடிக்க வேண்டிய பல திரைப்படங்களும் அவரது கணவராலே கைவிட்டு போனது. இவர் நடிக்க வேண்டிய பெரும்பாலான படங்களில் தேவிகாதான் நடித்துள்ளாராம். இவ்வாறு தனது மனைவியின் வளர்ச்சியை கணவரே கெடுத்துள்ளார்.

இதையும் வாசிங்க:படப்பிடிப்பில் நடிக்க முடியாமல் திணறிய அஜித்!.. எல்லாமே அந்த நடிகைக்காகத்தானாம்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top