Connect with us
mkt

Cinema History

பாகவதரின் கடைசி ஆசை என்ன தெரியுமா? மலர் தூவி நடக்க வச்ச நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா?

MKT Bhagavathar: தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டவர் பாகவதர். நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் வலம் வந்தார். இவர் நடித்த படங்களில் இவரே பாடி நடிக்கவும் செய்வார். சினிமாவில் இவர்தான் முதல் தலைமுறை நடிகராகவும் அறியப்பட்டார்.

இவருக்கு பிறகுதான் எம்ஜிஆர் , சிவாஜி போன்ற நடிகர்கள் அடுத்த தலைமுறையில் வந்தனர். இந்த நிலையில் பிரபல சினிமா எடிட்டரும் ஜெயம் ரவியின் தந்தையுமான மோகன் பாகவதரின் கடைசி கால நிகழ்வை பற்றி சில சம்பவங்களை பகிர்ந்தார்.

இதையும் படிங்க: இப்படி காட்டினா பாத்தவுடனே ஜூமிங்தான்!.. இளசுகளை ஏக்கப்பட வைக்கும் ஸ்ருதி ஹாசன்!..

பாகவதர் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் நகைச்சுவை நடிகர் தங்கவேலுதான் அவருக்கு உதவினாராம். தங்கவேலு பல படங்களில் நடித்து ஏராளமான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த நேரம். பல இடங்களில் நிலங்களை வாங்கியும் பெரிய பெரிய வீடுகள், பங்களாக்களை வாங்கியும் இருந்தாராம்.

அப்போது பாகவதரின் நிலையை அறிந்த தங்கவேலு தனக்கு சொந்தமான பங்களாவில் பாகவதரை தங்க வைத்தாராம். பாகவதரும் அந்த பங்களாவில் தங்க அவருக்கு உதவியாக இருந்தவர் ஜெயம் ரவியின் அப்பா மோகன்தானாம்.

ஒரு சமயம் பாகவதரின் உடல் மோசமாக மோகனை அழைத்து பாகவதர் ‘ நான் இங்கு இருந்து கிளம்புகிறேன். இவ்வளவு நாளாக சும்மா உட்கார்ந்து சாப்பிட்டு விட்டேன். அதனால் இதற்கு  மேல் என் மனம் இடம் கொடுக்க வில்லை. அதனால் கிளம்புகிறேன்’ என்று சொல்லிவிட்டு தஞ்சாவூர் மாரியம்மன் கோயிலில் போய் படுத்துக் கொண்டாராம் பாகவதர்.

இதையும் படிங்க: குண்டடி பட்டபின் கிண்டலடித்த எதிரிகள்!.. பல நாட்கள் பயிற்சி எடுத்து சாதித்து காட்டிய எம்.ஜி.ஆர்..

அங்கு ஒரு நார் கட்டிலில்தான் படுத்தாராம். அதன்பிறகு அவரது உடல் மிகவும் மோசமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பாகவதரின் தம்பியான கோவிந்தராஜ பாகவதரை அழைத்து ‘எனக்கு ஒரு கடைசி ஆசை இருக்கிறது. நிறைவேற்றுவியா?’ என பாகவதர் கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் தம்பியும் சொல்லுங்கள் அண்ணா என சொல்ல ‘ நான் இறந்த பிறகு என் உடலை இந்த சினிமாக் காரங்க கையில் மட்டும் கொடுத்துவிடாதே’ என்று சொல்லியிருக்கிறார் பாகவதர். ஏனெனில் அந்தளவுக்கு ஒரு கட்டத்தில் சினிமாவால் மிகவும் பாதிப்படைந்திருக்கிறார் பாகவதர்.

இதையும் படிங்க: கதை பிடிக்காமல் நோ சொன்ன கமல்! ரஜினி நடித்து சூப்பர் ஹிட்டான எவர்கிரீன் திரைப்படம்

அவர் சொன்னதைப் போலவே அவர் இறந்ததும் பாலையா, எம்.ஆர்.ராதா. தங்கவேலு போன்றவர்கள் எல்லாம் உடலை வாங்க வர அவரது தம்பி அவர்களிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டாராம். அதன்பின் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று விட்டார்களாம். ஒரு காலத்தில் மலர் தூவி அந்த மலரில் நடந்த முதல் நடிகராக பாகவதர் இருந்தார். ஆனால் அவரின் கடைசி காலம் பெரும் மன வலியைத்தான் கொடுத்திருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top