சிம்பு கேட்டா அதுக்கு எஸ்தான் சொல்வேன்… காரணம் பக்காவா இருக்கே மிஸ்டர் சந்தானம்..!

STR, Santhanam
நடிகர் சந்தானம் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் தனக்கென தனி பாணியை அமைத்துக் கொண்டு திரையுலகில் வெற்றி நடை போட்டு வருகிறார். அவரது பாணியில் கொஞ்சம் கவுண்டமணியின் சாயல் தெரிந்தாலும் அது நம்மை ரசிக்கவே வைக்கிறது. ஆனால் அவர் கதாநாயகனாக நடிப்பதை விட காமெடியனாக நடிப்பதையே ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
அதனால் தான் 12 ஆண்டுகளாக பெட்டியில் முடங்கிக் கிடந்த மதகஜராஜா இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டது. சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து சந்தானம் கலக்கினார். இந்தப் படத்தை இப்போது நினைத்தாலும் அந்தளவு கொடுக்க முடியாது.
காரணம் அப்போது உள்ள எனர்ஜி வேற லெவலாக இருந்தது. இப்போ அது மிஸ்ஸிங். அதனால்தான் கேங்கர்ஸ்ல கூட வடிவேலு எவ்வளவோ டிரை பண்ணியும் சிரிக்க வைக்க முடியல. புதுசா படம் பார்க்குறவங்க தான் சிரிச்சிட்டு வரணும்.
ஆரம்பத்தில் சந்தானத்துக்கு உறுதுணையாக இருந்து பல படவாய்ப்புகளை வாங்கிக் கொடுத்தவர் நடிகர் சிம்பு. இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர். காதல் அழிவதில்லை, போடா போடி, ஒஸ்தி, வானம், சிலம்பாட்டம், வல்லவன், மன்மதன் என பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இப்போது மதகஜராஜாவின் வெற்றிக்குப் பிறகு சந்தானம் கொஞ்சம் இறங்கி வந்துள்ளார். இனி காமெடியனாகவும் பழையபடி படங்களில் நடிப்பதாக முடிவெடுத்துள்ளாராம். அந்த வகையில் இப்போது சிம்பு குறித்து ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.
ஒரு நாள் சிம்பு எனக்கு போன் பண்ணி படம் ஒண்ணு பண்றேன். அதுல நீங்களும் நடிக்கணும்னு கேட்டாரு. அவர் கேட்டா எஸ் தான். அதுக்கு மேல ஒண்ணும் சொல்ல முடியாது. அவர அந்த இடத்துல வச்சி இருக்கேன். ஏன்னா என்னோட ஆரம்பத்துல இருந்து அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கேன் என்கிறார் நடிகர் சந்தானம்.