Connect with us
simbu

Cinema News

எங்க வலி என்னைக்குமே உனக்கு புரியாது! சிம்புவுக்கு எதிராக திரும்பிய ரசிகர்கள் – இதுக்கு மேலயும் முடியாது

Actor Simbu: கிடைத்த வாய்ப்பை கை நழுவ விட்டு நிற்கதியாக இருக்கும் சிம்பு. இன்று தமிழ் திரையுலகமே இவரை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்து வருகிறது. ஆரம்பத்தில் அப்படி இப்படி இருந்திருந்தாலும் மாநாடு படத்திற்கு பிறகு ஒரு பெரிய கம்பேக்கை கொடுத்தார் சிம்பு.

அந்த படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்ததால் சிம்புவை தேடி பல பெரிய நிறுவனங்கள் வாய்ப்புக்களை அள்ளிக் கொடுக்க முன்வந்தது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: என்கிட்ட உன் வேலை பலிக்காது!.. மணிரத்னம் செஞ்ச வேலையில் ஆடிப்போன சிம்பு…

அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டும்படியாக அமைந்தது. அதனை தொடர்ந்து பத்து தல படத்தில் ஒரு பெரிய கேங்ஸ்டராக நடித்து அசத்தியிருப்பார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த சிம்புவை பார்த்து திரையுலகம் ஆச்சரியப்பட்டது.

இன்னும் சிம்புவின் பாதை வெற்றிப்பாதைதான் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கமல் பட நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் கமிட் ஆனார் சிம்பு. அறிவிப்பு வந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்தப் படத்திற்கான எந்தவொரு அப்டேட்டும் வரவில்லை.

இதையும் படிங்க: ஊரே ப்ரதீப் பிரச்னைக்காக சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. ஆனா அவர் காதலி என்ன சொன்னார் தெரியுமா?

படப்பிடிப்பும் நடத்தப்படவில்லை. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். ஒரு கட்டத்தில் இணையதள பக்கத்தில் ‘ நல்லா இரு தலைவா.  எங்க வலி என்னைக்குமே உனக்கு புரியாது. நாங்கள் உன்னை விட்டு போகிறோம். முட்டுக் கட்டை குடுத்து குடுத்து வலி எங்களுக்குத்தான்’ என்று பதிவிட்டு சிம்பு ஹேஷ் டேக்கையும் சேர்த்து போட்டிருக்கிறார்கள்.

மற்ற ரசிகர்கள் அவர்களின் தலைவன் பட ரிலீஸ் மற்றும் அப்டேட்களை பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் போது சிம்புவின் ரசிகர்கள் எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருப்பது ஒரு கட்டத்தில் அவர்களுக்கே வெறுப்பாகிவிட்டது.

இதையும் படிங்க: சோறு, சண்டை, காசு!.. ஒரே கதையை வச்சு உருட்டும் சிறகடிக்க ஆசை..! இப்படியே போனா என்ன ஆகுறது..?

இதில் சுதா கொங்கராவுடன் ஒரு படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அதை கொம்பாலாயா நிறுவனம் தான் தயாரிக்க இருந்தது. ஆனால் சிம்பு பெரிய நிறுவனம் சுதா கொங்கரா இயக்கம் என பார்க்காமல் அதிகமான சம்பளத்தை கேட்டு வந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top