ஜெயம் ரவிக்கு முன்பே சிம்புவோடு பிரச்சினை செய்த மாஸ் நடிகர்! அடிதடியில என்ன நடந்தது தெரியுமா

by Rohini |
simbu
X

simbu

Simbu Jayam Ravi: சமீபகாலமாக சிம்பு மற்றும் ஜெயம் ரவி சம்பந்தப்பட்ட செய்திதான் இப்போது ஹாட் டாப்பிக்காக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருவருக்கும் உண்மையிலேயே எதாவது பிரச்சினையா அல்லது என்னதான் நடக்கிறது என்று புரியாமல் ரசிகர்களும் குழம்பி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் தக் லைஃப் படத்தில் சிம்பு உள்ளே எண்ட்ரி ஆனதும் ஜெயம் ரவி வெளியேறியதுதான்.

இதே மாதிரி ஒரு சம்பவம் தான் பொன்னியின் செல்வன் படத்திலும் நடந்தது. சிம்பு இந்தப் படத்தில் நடிக்கிறார் என்றதும் ஜெயம் ரவி என்னால் நடிக்க முடியாது என்று சொன்னதாகவும் மணிரத்னம் சிம்புவை ஒதுக்கியதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க:பாடலில் தெறிக்கவிட்ட வாலி!.. கவிஞருக்கு எம்.ஜி.ஆர் செய்த மிகப்பெரிய மரியாதை!..

சொல்லப்போனால் இதை சொன்னதே வலைப்பேச்சு அந்தனன்தான். இதை பற்றி ஜெயம் ரவியிடம் கேட்டபோது ‘முதலில் நான் சொன்னால் மணிரத்னம் கேட்கிற ஆளா? அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி செய்தி வெளியானதும் சிம்புவும் நானும் இதை பற்றி பேசி சிரித்துக் கொண்டோம்’ என்று கூறியிருந்தார்.

அதோடு வலைப்பேச்சு அந்தனனை குறிப்பிட்டும் ஜெயம் ரவி ‘அவனுங்க அப்படித்தான் வேலைவெட்டி இல்லாமல் பேசுவாங்க’ என்பது போலவும் பேசியிருந்தாராம். இது வலைப்பேச்சு அந்தனனுக்கு கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் சமீபத்தில் வலைப்பேச்சு அந்தனன் ஒரு பேட்டியில் ‘அன்று ஜெயம் ரவி அப்படி சொல்லியிருந்தார். ஆனால் இன்று? அதனால் அவர்களுக்குள் பிரச்சினை இருப்பது உண்மைதான்’ என திட்டவட்டமாக கூறினார்.

இதையும் படிங்க: ஒருவழியா முத்துவை வில்லனாக்கியாச்சு… டைரக்டர் மீது காண்டான ரசிகர்கள்…

அதுமட்டுமில்லாமல் 2002 ஆம் ஆண்டு நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றதாம். அப்போது நடிகர் ஸ்ரீகாந்த் உடன் அந்தனனும் சென்றிருந்தாராம். அந்த நேரத்தில் சிம்புவுக்கும் அருண்விஜய்க்கும் சரியான அடிதடி நடந்திருக்கிறது. இருவருமே அடிக்க சென்றிருக்கின்றனர். அங்கு இருந்தவர்கள்தான் அவர்களை தடுத்து சமாதானப் படுத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் சாரி கேட்டுக் கொண்டார்களாம்.

பின் சென்னை வந்ததும் இதை பற்றி அந்தனன் ஒரு பத்திரிக்கையில் எழுத அருண்விஜயும் சிம்புவும் அந்த மாதிரி எங்களுக்குள் நடக்கவே இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் சினிமாவில் அதுவும் ஒரே துறையில் இருக்கிறவர்கள் எதையும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் என அந்தனன் கூறினார்.

இதையும் படிங்க: சந்தானம் கல்யாணத்துக்கு போகாத சிம்பு!.. ஆனா அதுக்கு பதிலா அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..

Next Story