விஷால் நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம்! ஆனால் சிம்பு நடிக்க வேண்டியது.. என்ன படம் தெரியுமா

by Rohini |   ( Updated:2024-01-31 07:31:36  )
simbu
X

simbu

Actor Simbu: தமிழ் சினிமாவில் தற்போது மாஸ் லுக்கில் கலக்கி வருபவர் நடிகர் சிம்பு. ராஜ்கமல் நிறுவனத்துடன் ஒரு புதிய படத்தில் நடித்துவருகிறார். சிம்புவின் கெரியரிலேயே இந்தப் படம்தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் திரைப்படம் என்று சொல்லப்படுகிறது.

தேசிங்கு பெரியசாமிதான் இந்தப் படத்தை எடுக்கிறார். மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம். அதுவரை சிம்புவின் லைஃப் அவ்ளோதான் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு சிம்புவுக்கு எண்ட் கார்டே கிடையாது என்று சொன்ன படமாக மாநாடு திரைப்படம் அமைந்தது.

இதையும் படிங்க: ஒதுக்கப்படும் தமிழ் தயாரிப்பாளர்கள்… முன்னணி தமிழ் நாயகர்களுக்கு வலை வீசும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்…

100 கோடி க்ளப்பிலும் அந்தப் படம் இணைந்தது. அந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்து சிம்புவை வைத்து இயக்க பல இயக்குனர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் ஆரம்பகாலங்களில் சிம்புவின் நிலை குறித்து பிரபல இயக்குனரும் நடிகருமான தருண் கோபி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் கடைசி மகனாக நடித்தவர்தான் இந்த தருண் கோபி. இவர் இயக்குனரும் கூட. முதன் முதலில் தருண் கோபி இயக்கிய படம் ‘திமிரு’. விஷால் நடிப்பில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் படத்தில் முதலில் சிம்புதான் நடிக்க வேண்டியதாம்.

இதையும் படிங்க: அதகளம் செய்யும் ரஜினி.. அதிரவைக்கும் ரஹ்மான்.. வெளியான லால் சலாம் பட முதல் விமர்சனம்…

ஒரு பட சூட்டிங்கின் போது இந்தப் பட கதையை சிம்புவிடம் போய் சொல்லியிருக்கிறார் தருண் கோபி. சிம்புவுக்கும் கதை பிடித்துப் போக இதை நேராக தன் அம்மாவிடமும் போய் சொல்ல சொல்லியிருக்கிறார். சிம்புவின் அம்மா இந்த கதையை கேட்டதும் கதை எல்லாம் ஓகே. ஆனால் படத்தில் அந்த லேடி கேரக்டர்தான் பெரிசாக பேசப்படுகிற மாதிரி தெரியும் என வில்லி கேரக்டரை பற்றி சொல்லி சாரி தம்பி, இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி மறுத்துவிட்டாராம்.

Next Story