இது என்னடா புது திருப்பமா இருக்கு? STR 48 ஆல் சிம்புக்கு அடித்த ஜாக்பாட்.. கை கொடுத்து தூக்கிய கமல்

Published on: March 26, 2024
simbu
---Advertisement---

கமல் நடிப்பில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு. 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல் மணிரத்தினம் கூட்டணி இந்த படத்தின் மூலம் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு ஒரு பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது.

நாயகன் படம் எந்த அளவு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்த கூட்டணி இப்போது இந்த தக் லைஃப் படத்தின் மூலம் இணைந்திருப்பது மீண்டும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: இரு பக்கமும் நெருங்கும் பிரச்னை… முத்து சமாளிப்பாரா இல்ல சிக்கிக்கொள்வாரா? பார்த்துடலாம்…

இந்தப் படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். கமலுடன் இணைந்து திரிஷா, ஜெயம் ரவி போன்ற பல நடிகர்கள் நடித்து வரும் நிலையில் துல்கர் சல்மான் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார்.

ஆனால் துல்கர் சல்மானுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட படங்கள் கைவசம் இருந்த நிலையில் கால்ஷீட் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. அதன் பிறகு பிரபல தெலுங்கு நடிகர் நானி இந்த படத்தில் உள்ளே நுழைவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க: காமெடி நடிகரால் வீதிக்கு வந்த கண்ணதாசன்!.. பல பேர் சொல்லியும் கேட்கலயே!…

ஆனால் இப்போது வந்த தகவலின்படி தக் லைஃப் படத்தில் சிம்பு உள்ளே நுழைய இருப்பதாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் ஏற்கனவே கமல் தயாரிப்பில் அவருடைய 48வது படத்தில் கமிட்டாகி இருந்தார். அந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்தது.

ஆனால் இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக தாமதமாகும் நிலையில் தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு வருகின்றன. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்குவதாக தெரிகிறது. இந்தப் படத்திற்கு பிறகு தான் சிம்பு தனது 48வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார் என்றும் செய்திகள் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினியை வைத்து 20/20 ஆடிய இயக்குனர்… கப் அடிச்சு கொடுத்த பிகிலும் இவருதானாம்!….

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.