ஓவரா பண்ணுறீங்க ஜீவா… விடாமல் விரட்டும் மனோஜ் மற்றும் ரோகிணி… கொடுப்பீங்களா? மாட்டீங்களா?

by Akhilan |
ஓவரா பண்ணுறீங்க ஜீவா… விடாமல் விரட்டும் மனோஜ் மற்றும் ரோகிணி… கொடுப்பீங்களா? மாட்டீங்களா?
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்டேஷனில் வண்டிக்காக மீனா அழுதுக்கொண்டு நிற்கிறார். உள்ளே மனோஜும், ரோகிணியும் ஜீவாவிடம் காசுக்காக சண்டை போட்டு கொண்டு உள்ளனர். மீனாவை பார்க்கும் லேடி கான்ஸ்டபிள் என்னம்மா விஷயம் எனக் கேட்கிறார்.

இது என்னுடைய வண்டி மேம். நோ பார்க்கிங்கில் தெரியாம நிறுத்திட்டு போயிட்டேன். எடுத்துட்டு வந்துட்டாங்க என்கிறார். நான் எதுவும் செய்ய முடியாதும்மா. எஸ்.ஐ மேம் வந்தால் தான் நடக்கும் எனக் கூறிவிடுகிறார். இதனால் முத்துவிடம் சொல்லலாமா? வேண்டாமா எனத் தயங்கிக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: போன வாரம் ரோமியோ.. இந்த வாரம் ரத்னம்!.. வரிசையாக போட்டு தள்ளும் கில்லி!.. ஐயோ பாவம்!..

ஸ்டேஷன் உள்ளே ஜீவாவிடம் காசை கேட்க அவரோ நான் இவரை கல்யாணம் செஞ்சிக்கிறதா தான் இருந்தேன். ஆனால் இவர் தான் என்னை ஏமாத்தி இந்த பொண்ணை கட்டிக்கிட்டதா பொய் சொல்கிறார். மனோஜ் என்ன பொய் சொல்ற என வாக்குவாதம் செய்து கொண்டு இருக்கின்றனர்.

மீனா, முத்துவுக்கு கால் செய்து வண்டி விஷயத்தினை கூற நோ பார்க்கிங்கில் யாரும் வண்டியை நிறுத்துவாங்களா என்கிறார். உள்ளே ஜீவா இவன்கூட ஒரு வருஷம் வாழ்ந்தேன். அதுக்கு அந்த காசு சரியா போச்சு என்கிறார். இதை கேட்கும் ரோகிணி இப்படி பேச அசிங்கமா இல்லையா எனத் திட்டுகிறார்.

இதையும் படிங்க: யாஷிகா ஆனந்த் ‘சரக்கு’ பாடலுக்கு வைரமுத்து ட்வீட்!.. முக்கியமான விஷயத்தை சொல்லியிருக்காரு பாருங்க!..

வெளியில் மீனா அழுதுக்கொண்டே இருக்க எஸ்.ஐ வரட்டும் எனக் காத்திருக்கின்றனர். உள்ளே போலீஸார் ஜீவாவிடம் காசை கொடுத்துட்டா கேஸ் இருக்காது. இல்ல கேஸ் போட்டா அது முடியுற வரை நீங்க கனடா போக முடியாது என்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story