Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியை காண வருகிறார் மீனா. வீட்டுக்கு வர மாட்டீங்களா எனக் கேட்க ஏன் உங்களுக்கு தெரியாதா என்கிறார் ஸ்ருதி. என் புருஷன் அடிச்சது தப்பு தான். அதை நான் நியாயப்படுத்த விரும்பலை. ஆனா உங்க அப்பா என்னை ரொம்ப மோசமா பேசிட்டார்.
அந்த கோபத்துல தான் அவர் அடிச்சிட்டாரு என்கிறார். ஆனால் ஸ்ருதி அவர் எதோ நடந்ததை பாத்து தப்பா புரிஞ்சி இருப்பார். நீங்க பொறுமையா சொல்லி விளக்கி இருக்கலாமே எனக் கூறுகிறார். இதை கேட்ட மீனா நடந்த விஷயத்தினை சொல்லிவிடுகிறார். நான் வேணா உங்க அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார்.
இதையும் படிங்க: நயன்தாராவோட புது ஆபிஸ் பார்த்தீங்களா?.. அடுத்த புதிய தொடக்கத்தை ஆரம்பிச்சிட்டாங்களே அன்னபூரணி!..
அவர் அடிச்சதுக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்கணும். எனக்காக தானே அடிச்சாரு. அதான் நானே மன்னிப்பு கேட்கிறேன். உங்க வீடு அதுதான். நீங்க வருவீங்கனு நினைக்கிறேன். யோசிச்சு நல்ல முடிவா எடுங்க என்கிறார். இதை தொடர்ந்து ரவியை சந்திக்க வருகிறார் முத்து. எதுக்கு வீட்டுக்கு வரமாட்டுற. மாமியார் வீட்டுக்கு போனா ஒருநாள் தங்கிட்டு வரவேணாமா? அங்கையே சொகுசா தங்கிடுற.
அப்பா உனக்காக கவலைப்பட்டுக்கிட்டு இருக்காரு என்கிறார். ரவியின் நண்பர் வந்து அவன் இங்க தான் தூங்குனான். ரெண்டு, மூணு பேரு தங்கி இருக்கும் ஸ்டோர் ரூம் மாதிரியான ரூமில் தான் என்கிறார். இதைகேட்ட முத்து, உனக்கு அங்க வீடு இருக்கு ஏன்டா இப்படி என்கிறார். எல்லாம் நீ அடிச்சதால தான். அவர் மீனாவை பத்தி பேசுனாரு என்கிறார் முத்து. நான் ஸ்ருதி வந்தா தான் வருவேன் என்கிறார் ரவி.
இதையும் படிங்க: ரஜினிக்கே படம் பண்ண முடியாதுன்னு திமிர் காட்டிய ஷங்கர்!.. தயாரிப்பாளருக்கும் கதை சொல்ல மாட்டாராம்!..
அடுத்ததாக, வீட்டுக்கு வருகிறார் மீனா. அங்கு நடந்த விஷயத்தினை கூறுகிறார். இதை சாக்காக வைத்து முத்துவை மட்டம் தட்டுகிறார் சத்யா. மீனா அம்மா, சீதா இருவரும் முத்து சரியென சப்போர்ட் செய்கிறார். இதே பணக்கார பெண்ணை அப்படி பேசி இருப்பாங்களா? நம்ம ஏழையா சாக கூடாது. நிறைய சம்பாரிக்கணும். அது அப்பா மேல சத்தியம் எனக் கூறிவிட்டு கிளம்பி செல்கிறார்.
இதையடுத்து டப்பிங் பேசி முடிக்கும் ஸ்ருதி, பசிக்குது என சிலவற்றை ரவி ரெஸ்டாரெண்டில் ஆர்டர் செய்கிறார். அதை பார்த்த நண்பர் ரவியுடன் சொல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…