நயன்தாராவோட புது ஆபிஸ் பார்த்தீங்களா?.. அடுத்த புதிய தொடக்கத்தை ஆரம்பிச்சிட்டாங்களே அன்னபூரணி!..

நடிகை நயன்தாரா புதுசு புதுசா பல பிசினஸ்களை ஆரம்பித்து காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என உஷாராக தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறார். பொதுவாக சினிமா நடிகைகள் ஹீரோயின்களாக இருந்து 5 முதல் 10 ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் காலியானதும் சின்னத்திரை நடிகைகளாக மாறி விடுவார்கள். அதன் பின்னர் எந்த நடிகருக்கு ஹீரோயினாக நடித்தாலும் அவருக்கு அம்மாவாகவும் அக்காவும் நடித்து சினிமாவில் ஜீவிதம் செய்வார்கள்.

ஒரு சில நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே, சினிமாவைத் தாண்டியும் அடுத்த லெவலுக்கு பிசினஸ் உள்ளிட்ட விஷயங்களை செய்து எப்போதுமே ஆக்டிவாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நினைக்கும் ஒருவர்தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இதையும் படிங்க: ரஜினிக்கே படம் பண்ண முடியாதுன்னு திமிர் காட்டிய ஷங்கர்!.. தயாரிப்பாளருக்கும் கதை சொல்ல மாட்டாராம்!..

கோலிவுட்டில் கிட்டத்தட்ட நயன்தாராவுக்கு திருமணத்துக்கு பிறகு பல முன்னணி நடிகர்களும் பட வாய்ப்புகளை தருவதில்லை. சோலோவாக மட்டுமே நயன்தாரா நடித்து வருகிறார். ஆனால் அந்த படங்களும் பெரிதாக ஓடுவதில்லை.

ஸ்கின் கேர் ப்ராடக்ட், நாப்கின் உள்ளிட்ட பிசினஸ் கதை சமீபத்தில் நயன்தாரா ஆரம்பித்துள்ளார். என்னை ரிலீஸ் தற்போது தனது ட்ரீம் ஆபீஸை உருவாக்கி இருக்கிறார். சோசியல் மீடியா பக்கத்தில் அதன் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ஜாக்கெட் எங்கேம்மா காணோம்!.. காவியாவை பார்த்து கலாய்த்து தள்ளும் ஃபேன்ஸ்!.. இவங்கதான் இந்திராணியாம்!

இந்தப் புதிய ஆபீஸ் புதிய தொடக்கத்துக்கான ஒன்று என நயன்தாரா பதிவிட்டுள்ளார். அடுத்து என்ன பிசினஸை நயன்தாரா ஆரம்பிக்கப் போகிறார் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக டெஸ்ட் எனும் படம் வெளியாக காத்திருக்கிறது. அந்தப் படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் மற்றும் சித்தார்த் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். சம்மருக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் தேதியை அறிவிக்கவில்லை. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்னும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ரொம்ப நாளைக்கு பிறகு வெளியே வரும் கார்த்திக்! உண்மையிலேயே அவருக்கு என்னதான் ஆச்சு?

 

Related Articles

Next Story