மனோஜோட ஆசைல மண்ணள்ளி போட்ட முத்து, ரவி!… என்ன நடந்துச்சு?

X
மனோஜோட ஆசைல மண்ணள்ளி போட்ட முத்து, ரவி!… என்ன நடந்துச்சு?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தொகுப்புகள். 

மீனா, முத்து மற்றும் ஸ்ருதி, ரவிக்கு இரண்டாவது முறையாக பாட்டி தயவில் கல்யாணம் முடிந்துவிடுகிறது. ஆனால் இரு ஜோடிக்கும் முறையாக சாந்தி முகூர்த்தம் நடத்த பாட்டி முடிவெடுத்து மனோஜை எல்லா வேலைகளையும் செய்ய சொல்கிறார். 

சீக்கிரம் உங்க அம்மா பாட்டியாகணும் எனக் கூற அதான் நடந்துச்சே என உளறுகிறார் முத்து. என்ன என பாட்டி கேட்க இல்ல இப்போ ரெடி செஞ்சானே அதை சொன்னேன் என சமாளித்து விடுகிறார். பின்னர் இரண்டு ஜோடிகளும் ரூமில் இருக்கின்றனர். 

முத்து, மீனா இருவரும் சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டு இருக்கின்றனர். பாட்டு பாடி தங்கள் இரவை சந்தோஷமாக கொண்டாடுகின்றனர். பின்னர் ஸ்ருதி ரவியை வெட்கப்பட சொல்லி கலாய்த்து கொண்டு இருக்கிறார். 

மனோஜ் வந்து கனகாவை பார்க்க அவரும் குழந்தை தனமாக பேசிக்கொண்டு இருக்க கடுப்பில் இருக்கிறார் பப்பரப்பா மனோஜ். பின்னர் முத்துவின் ஷெட்டில் இருக்கும் போது, அவர் நண்பர் ஒருவர் மகனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டதாக சொல்கிறார். 

பின்னர் நண்பர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது ஆபத்தாக ஆட்டோவில் அழைத்து செல்வது குறித்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். தொடர்ந்து முத்து புதிய முடிவை எடுத்திருப்பது போல யோசனையில் இருப்பதுடன் எபிசோட் முடிந்தது.