மீண்டும் மொக்கை வாங்க காத்திருக்கும் மனோஜ்!... முத்து செய்த விஷயத்தால் அதிர்ச்சியான விஜயா

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்குள் வரும் அண்ணாமலை விஜயாவிடம் மீனாவை அப்படி வெளியில் திட்டிவிட்டு வர எனக் கத்துகிறார். பின்ன கடையை திறந்ததில் இருந்து காலையிலே அங்கே போய் உட்கார்ந்துக்கிறா? எங்களுக்கு பசிக்காதா என்கிறார் விஜயா.

ஏன் நீங்க யாரும் சமைக்க வேண்டியது தானே. நீ அந்த பொண்ணை கஷ்டப்படுத்தினாலும் அது உன்னை விட்டுக்கொடுக்காம எங்க அத்தை என்னை அம்மா மாதிரியே பாத்து கொள்வதாக சொன்னதாக சொல்லுகிறார். உடனே விஜயா அவ பூ கட்டுற மாதிரி வார்த்தைகளை நல்லா கோத்து பேசுவா என்கிறார். மீனாவின் நகைகளை கொடுத்து விடு என்கிறார். நானா வாங்குனேன்.

இதையும் படிங்க: பிக்பாஸ்ல இருந்து வெளியே வந்ததும் சிவகார்த்திகேயன் என்கிட்ட சொன்னது! சீக்ரெட்டை உடைத்த தினேஷ்

அவ தான் திமிரு எடுத்து கொடுத்தா என்கிறார் விஜயா. பின்னர் மீனா வந்துவிட பேச்சு அடங்கி விடுகிறது. அண்ணாமலை, மீனாவிடம் நகையை வாங்கி போட்டுக்கோ என்கிறார். இல்ல மாமா என் வீட்டுக்காரர் வாங்கி தருவாரு என்கிறார். அவனே டிரைவர் அவன் எப்போ வாங்கி தருவான். உங்க அறுவதாம் கல்யாணத்துல வேணுனா அதெல்லாம் நடக்கும் என்கிறார். மீனா அவர் வேலையை தப்பா பேசாதீங்க.

அவர் நினைச்சா இன்னைக்கே வாங்கி தருவாரு என்று விஜயாவின் வாயை அடைக்கிறார். அண்ணாமலை உனக்கு தான் புள்ளை மேல நம்பிக்கை இல்ல. அவளுக்கு அவ புருஷன் மேல நம்பிக்கை இருக்கு. எனக்கும் முத்து மேல நம்பிக்கை இருக்கு. சீக்கிரம் வாங்கி கொடுத்துடு என்கிறார் அண்ணாமலை. சரிப்பா எனக் கூறும் முத்து சாப்பிடலாமா எனக் கேட்க அவ தான் கடைக்கு போயிடுறாளே இனிமே தான் என்கிறார் விஜயா.

அப்போ மீனா, வாங்க இடியாப்பம், தேங்காய் பால், குருமா எல்லாம் ரெடியா இருப்பதாக கூறுகிறார். உடனே அண்ணாமலை கிச்சனில் போய் பார்க்கவே இல்லையா எனத் திட்டுகிறார். மனோஜ் வேலை செய்து கொண்டு இருக்கிறார். புரோமோஷன் எல்லாம் கிடைக்கும் எனக் ஒருவர் கூற நான் இங்கெல்லாம் நிறைய நாள் இருக்க மாட்டேன் எனக் கூறிவிடுகிறார்.

இதையும் படிங்க: இமான் மனைவிய இப்படித்தான் டார்ச்சர் பண்ணுவேன்!.. எஸ்.கே. பேசிய வீடியோவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!..

கோபமாக வெளியில் வரும் ரோகினி புருஷனுக்கு கால் செய்து நீ ரொம்ப வேலை பார்க்குறப்பா. சாப்பிடு என பேசிக்கொண்டு இருக்கிறார். ஷெட்டில் இருக்கும் முத்து சீட்டை எடுத்து கொள்கிறார். அதை வைத்து மீனாவுக்கு தாலி வாங்கி வந்து கொடுக்கிறார். ரவி, ஸ்ருதி, அண்ணாமலை சந்தோஷப்பட ரோகினி, மனோஜ், விஜயா மூஞ்சில் கோபம் இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: இனிமே பேச்சே இல்லை!.. ஒன்லி வீச்சு தான்!.. கோட் மியூசிக் பத்தி மாஸ் அப்டேட் கொடுத்த யுவன்!..

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it