சும்மா இல்லாம இப்படி வந்து முத்துக்கிட்டையே சிக்கிட்டீங்களேயப்பா!... பிரவுன் மணியின் தில்லுமுல்லு…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போ அண்ணாமலை ரோகினி அப்பா வராததை குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ பிரவுன் மணி தானா ஒரு கதையை அளந்து கொண்டு இருக்கிறார். இதில் ரோகினி அம்மாவுக்கு கேன்சர் வந்ததாக அடித்து விடுகிறார்.
அப்போ ரோகினியின் உண்மையான அம்மா கால் செய்து பேச தனியாக சென்று பேசிவிட்டு வருகிறார். பின்னர் அங்கிருந்து வந்து கடுப்பாக மாமாவை திட்டுகிறார் ரோகினி. எங்க அம்மா இன்னும் சாகலை எனக் கூற ஷாக் ஆகி அனைவரும் அவரை பார்க்கின்றனர். பின்னர் அவரே சமாளித்து கொண்டு என்னுடன் தான் அவர் இருக்காங்க எனக் கூறிவிடுகிறார்.
இதையும் படிங்க: வதந்திக்குனு ஒரு அளவு வேணாமாடா? அஜித் லைன் அப்பில் இருக்கிறது இதுதான்..என்னெல்லாம் உருட்டுராங்க
பின்னர் பெண்கள் வீட்டுக்குள் அமர்ந்து இருக்க ஸ்ருதியும், மீனாவும் ஆறுதல் சொல்கின்றனர். உடனே விஜயா நான் உனக்கு அம்மா எனக் கூற பாட்டி அவ மட்டும் தான் உனக்கு மருமகளா எனக் கேட்க ஸ்ருதிக்கும் தான் என்கிறார் விஜயா. அப்போ மீனாவும் உன் மருமகள் தான் எனக் கூறுகிறார். அவளுக்கு தான் அம்மா இருக்கே அத்தை என்கிறார்.
ஸ்ருதிக்கும் தான் அம்மா இருக்காங்க எனக் கூற அதானே. வேண்டாம் அத்தை எனக்கு இருக்க அம்மாவே போதும் எனக் கூறிவிடுகிறார். பின்னர் ஆண்கள் வெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதை கேட்டும் ரோகினிக்கு ஷாக் ஆகிவிடுகிறது. இதனால் மாமாவிடம் வந்து தூங்கி ரெஸ்ட் எடுங்க என்கிறார்.
இதையும் படிங்க: கைய வச்சு பாரு.. யார கேட்டு இந்த டைட்டில் வச்ச? இயக்குனரை பாடாய் படுத்திய ஷகீலா..
உடனே சில இடங்களை சுற்றிக்காட்டும் முத்துவிடம் வாயாடிக்கொண்டே வருகிறார் பிரவுன் மணி. பின்னர் செல்வம் மலேசியா மாமாவை பார்க்கணுமேனு என்கூட வந்தான் எனக் கூற இந்தா பாருங்க என தன்னையே சுற்றி காட்டுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.