இரு பக்கமும் நெருங்கும் பிரச்னை… முத்து சமாளிப்பாரா இல்ல சிக்கிக்கொள்வாரா? பார்த்துடலாம்…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி அம்மாவும், வாசுதேவனும் ஒரு ரவுடியை வரச்சொல்லி இருப்பதாகவும் அவனை வச்சி பிரச்னையை தொடங்கி விடலாம். முத்துவும் கத்துவான். அப்போ ஸ்ருதி, ரவியை அழைச்சிட்டு நம்ம வீட்டுக்கு போகலாம் என்கிறார்.
இன்னொரு பக்கம் ரோகினியும், வித்யாவும் முத்துவை குடிக்க வைத்து பிரச்னையை ஆரம்பித்துவிடணும். அப்போ பங்ஷன் நிக்கும். இதனால் தான் அப்பா வரலைனு சமாளிச்சிடலாம் என்கிறார்கள். ஸ்ருதிக்கு நிறைய நகையை போட்டு விடுகின்றனர் அவரது தோழிகள்.
இதையும் படிங்க: வாலி எழுத வேண்டிய பாடலை எழுதிய கண்ணதாசன்!. போட்டியாளரை வாழவைத்த கவிஞரின் நட்பு!..
இது எனக்கு பிடிக்கலை என ஸ்ருதி கூற, உனக்கும், ரோகினிக்கும் ஒன்னா செய்றாங்க. யாரு நிறைய நகை போட்டு இருக்காங்கனு பார்ப்பாங்கள என்கின்றனர். ஸ்ருதி அம்மா வந்து மீண்டும் நிறைய நகையை போட்டு விடுகிறார். முத்து எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்.
மீனா கிள்ளி பார்க்க அவர் அப்போதும் பேசாமல் இருக்கிறார். ரோகினியிடம் ஸ்ருதி நகை விஷயத்தினை சொல்கிறார் வித்யா. அந்த நேரத்தில் அவர்கள் சொன்ன ஆள் வர முத்துவை காட்டி அவனை குடிக்க வைக்கணும் என்கின்றனர். அந்த நேரத்தில் ஸ்ருதி ரூமுக்கு விஜயா மாலையுடன் செல்கிறார்.
இதையும் படிங்க: சோ சொன்னதை கேட்டு அரசு விருதை வாங்க மறுத்த கண்ணதாசன்!.. காரணம் இதுதான்!..
ஸ்ருதி அம்மா துளசி மாலையுடன் செல்கிறார். இருவரும் செல்வதை பார்த்து கண்டிப்பா பிரச்னை செய்வாங்க என மீனாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். பின்னர் விஜயா மற்றும் ஸ்ருதியின் அம்மா தாங்கள் கொண்டு வந்த மாலையை தான் போட வேண்டும் என மாற்றி மாற்றி சண்டை போடுகின்றனர். இதனால் கடுப்பாகும் ஸ்ருதி இரண்டு மாலையை வாங்கி தன் கழுத்தில் போட்டுக்கொள்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.