சண்டைக்கு தயாரான முத்து… இருந்த கட்டுப்பாடு எல்லாம் காணாம போச்சோ… அட போச்சா!

by Akhilan |   ( Updated:2024-03-29 07:14:27  )
சண்டைக்கு தயாரான முத்து… இருந்த கட்டுப்பாடு எல்லாம் காணாம போச்சோ… அட போச்சா!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினிக்கு முன்னாடி ஸ்ருதி தாலி பிரிச்சு போட போவதால் மனோஜ் கடுப்பாகிறார். இதனால் ரோகினியிடம் சென்று உங்க அப்பா வர ப்ளைட் தகவல் சொல்லு, நான் எங்க இருக்குனு ட்ராக் செய்றேன் என்கிறார். அதெல்லாம் தெரியாது என்கிறார் ரோகினி. சரி கஸ்டமர் கேர் ஆபிஸில் கேட்கிறேன் என்கிறார்.

அங்கையும் பதில் இல்லாமல் போக மனோஜ் உண்மையா வராரா? என்கிறார். இதனால் கடுப்பாகும் ரோகினி திட்டி மனோஜை சமாளித்து அனுப்பி விடுகிறார். ஸ்ருதியின் அம்மாவிடம் விஜயா முதலில் ஸ்ருதிக்கே தாலி பிரிச்சு போட்றலாம் என்கிறார். இல்ல முதல் மருமகளுக்கு முதலில் செய்யணும் சொன்னீங்களே எனக் கேட்க நீங்க தான் ஏற்பாடு எல்லாம் செஞ்சது.

இதையும் படிங்க: கோபிக்கே ஷாக் கொடுக்கிறீங்களே பாக்கியா.. செழியன் பிரச்னை ஓவருங்க…

அதனால உங்க பொண்ணுக்கு தான் முதல் மரியாதை கிடைக்கணும் எனப் பேசுகிறார். இதில் சந்தேகமாகி விடுகிறார் ஸ்ருதியின் அம்மா. ரோகினியிடம் சென்று இது பற்றி விசாரிக்க அவர் அப்பா வரலை. வந்ததும் எனக்கு செஞ்சிக்கலாம். இப்போ ஸ்ருதிக்கே செய்யுங்க என்கிறார். ஓ அதான் விஷயமா என விஜயாவின் புத்தியை தெரிந்து கொள்கிறார் ஸ்ருதியின் அம்மா.

ஸ்ருதிக்கு தாலி பிரிச்சு போடும் பங்ஷன் நடந்து முடிகிறது. ரோகினி ஏற்பாடு செய்த ஆள் முத்துவை குடிக்க வைக்க மனதை கரைத்துக் கொண்டிருக்கிறார். முத்துவை நைசாக பேசி வாக்கிங் செல்லலாம் என கார் பார்க்கிங்க்கு அழைத்துச் சென்று அங்கு தன்னுடைய காரில் வைத்திருக்கும் சரக்கு பாட்டில்களை காட்டுகிறார். பின்னர் ஒரு கப்பில் ஊற்றிக் கொடுக்க அதை முத்து கையில் வாங்கிக் கொண்டு நிற்கிறார்.

இதையும் படிங்க: அஜித்துக்கு இந்த விஷயத்துல கோபம் அதிகமா வரும்! மாட்டிக்கிட்டு முழித்த டெக்னீசியன்கள்

இதனால் அருகில் இருக்கும் பரமு கோபப்பட அவரை சமாதானப்படுத்தி விடுகிறார் அண்ணாமலை. முத்துவுக்கு தெரிந்தால் ரொம்ப சத்தம் போடுவான் என திரும்பி பார்க்க அங்க முத்து இல்லாமல் போகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story