ரோகிணிக்கு மனசு வந்து ஒரு ஆப்பு டைரக்டர் ரெடி பண்ணி இருக்காரே! நடக்குதா பார்ப்போம்…

by Akhilan |
ரோகிணிக்கு மனசு வந்து ஒரு ஆப்பு டைரக்டர் ரெடி பண்ணி இருக்காரே! நடக்குதா பார்ப்போம்…
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து மற்றும் மீனா இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு வந்து டாக்டரை பார்த்து மாத்திரை வாங்குகின்றனர். மூன்று நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்கிறார். முத்துவும், மீனாவும் பேசிக்கொண்டே வெளியில் வர கிரிஷை ரோகிணி அம்மா அழுதுக்கொண்டே ஆம்புலன்ஸில் இருந்து இறக்குகிறார்.

அதை பார்த்து ஓடிவரும் மீனா, கிருஷ்க்கு என்னாச்சு என்கிறார். விளையாடிட்டு இருக்கும்போது வண்டிக்காரன் இடிச்சிட்டான். அதில் கண்ணில் அடிபட்டு விட்டதாக கூறுகிறார். பின்னர் டாக்டர் கிருஷை செக் செய்துவிட்டு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்கிறார். இவர்களுடன் மீனா மற்றும் முத்து துணையாக இருக்கின்றனர். பின்னர் ரோகிணி அம்மா அவருக்கு கால் செய்கிறார்.

இதையும் படிங்க: பிக் பாஸ் பிரபலத்தை விரட்டி விட்ட அம்மா!.. இனிமே எந்த தொடர்பும் இல்லை என நோட்டீஸ்!.. என்ன ஆச்சு?..

அந்த போனை எடுக்கும் ரோகிணி எதுக்கு இப்ப கால் செய்த என கேட்க அழுது கொண்டிருப்பதை கேட்டு பதறுகிறார். கிருஷை ஹாஸ்பிடலில் சேர்த்து இருப்பதையும் கூறுகிறார். ஆனால் இப்போது வரவேண்டாம். முத்து மற்றும் மீனா இருவரும் இருப்பதை கூறுகிறார். அவங்க எப்படி அங்க வந்தாங்க எனக் கேட்க நீ மீனாக்கு கால் பண்ணியா? இல்லம்மா மீனாக்கு ஜுரம்னு டாக்டர் பாக்க வந்திருக்காங்க என்கிறார்.

அவங்க போனதுக்கப்புறம் கால் பண்றேன் என கூறி போனே வைக்கிறார் ரோகிணி அம்மா. அந்த நேரத்தில் மனோஜ் ரோகிணியை அழைத்து கெட்டில் பற்றி கூற சொல்கிறார். அப்போ மனோஜ் ஏசி வாங்கினால் இந்த கெட்டில் ப்ரீ என கூறுவதை வைத்து ஹாஸ்பிடல் பிசினஸ் செய்வது போல சில கெட்டல்களை எடுத்துக்கொண்டு அங்கு கிளம்பிடுகிறார். ஹாஸ்பிடலில் பார்த்து ஒவ்வொரு வாடாக கெட்டிலை வைத்துவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: இன்னும் பெட்டரா வேணும்!.. பாக்கியராஜ் சொன்னதில் கடுப்பாகி கத்திய இளையராஜா.. அந்த சூப்பர் ஹிட் பாட்டா!..

சரியாக கிரிஷ் ரூம் வரும் போது முத்து மற்றும் மீனா இருவரும் வெளியே வருகின்றனர். நீங்க எங்க இங்க எனக் கேட்க பிசினஸ் விஷயமாக வந்ததாக கூறுகிறார். நல்ல விஷயமா இருக்கே பார்லர் அம்மா அப்போ என் கார்டையும் கொடுத்துடு என முத்து கொடுக்கிறார். நீங்க கிளம்புறீங்களா எனக் கேட்க இல்லை. கிரிஷுக்கு அடிப்பட்டு இருக்கு. அவங்க பாட்டி ரொம்ப பயப்படுறாங்க. அதான் நாங்க இங்க இருக்கோம். இப்போ கேண்டீன் போறோம் என்கிறார்.

முத்து மீனாவை கூப்பிட்டுக்கொண்டு கேண்ட்டீன் செல்கிறார். வார்டுக்குள் வரும் ரோகிணி கிரிஷை பார்த்து அழுது புலம்புகிறார். கிரிஷை பற்றி வீட்டில் பேசுமாறு கூறுகிறார். வெளியில் வரும் ரோகிணியிடம் மீனா முடிஞ்சிதா எனக் கேட்க ஆமாம் என்கிறார். நீங்க என ரோகிணி கேட்க கொஞ்ச நேரம் இருக்கணும். அவங்களுக்கு யாரும் இல்லை என்கிறார் மீனா. அதான் அத்தைனு ஒரு பொண்ணு இருக்கே என முத்து கூறுகிறார். அந்த பொண்ணு வெளிநாட்டில் வேலை பார்க்குதே.

இங்க இல்லாத வேலையா வெளிநாட்டில் இருக்கு. அப்படி என்ன அம்மா, பையனை விட்டுட்டு பார்க்கணும் என முத்து கூற அது எதுக்கு உங்களுக்கு என ரோகிணி கடுப்படிக்கிறார். இதை கேட்டு முத்து மற்றும் மீனா அதிர்ச்சியாக பார்ப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: வேணாம்னு சொன்ன பாட்டுக்கு தேசிய விருது..! சாதித்துக் காட்டிய ஏவிஎம் படம்…

Next Story